காதலை கைவிட்டதால் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி- வாலிபர் கைது

காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார்.இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
காதலை கைவிட்டதால் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி- வாலிபர் கைது
Published on

தேனி:

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகில் உள்ள குல்லப்புரம் மேட்டுக்காலனியை சேர்ந்த சங்கிலி மகன் ஜான்பாண்டியன் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் காதலை கைவிட்டார்.

அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டதால் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் ஜான்பாண்டியன் தரப்பினரை வரவழைத்து இனிமேல் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜான்பாண்டியன் தப்பி ஓடினார்.

இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், ஏட்டு சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜான்பாண்டியனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com