என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் வெள்ளி நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்ற திருடர்கள்
    X

    ராஜஸ்தானில் வெள்ளி நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்ற திருடர்கள்

    • அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று திருடர்கள் அஞ்சினர்.
    • பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தானில் 90 வயது மூதாட்டியைப் படுக்கையோடு தூக்கிச் சென்று மர்ம நபர்கள் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் 90 வயதான அந்த மூதாட்டி நேற்று உறங்கிக் கொண்டிருந்தார்.

    கடந்த புதன்கிழமை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், மூதாட்டி அணிந்திருந்த கனமான வெள்ளி நகைகளைக் கழற்ற முயன்றனர்.

    ஆனால், அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று அஞ்சிய திருடர்கள், அவரை அவர் படுத்திருந்த கட்டிலோடு அப்படியே தூக்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வயல்வெளிக்குச் சென்றனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றதும், மூதாட்டி அணிந்திருந்த வெள்ளி மற்றும் பிற நகை நகைகளை திருடர்கள் பிடுங்கிச் சென்றனர்.

    மறுநாள் காலையில், மூதாட்டி கைகள் கட்டப்பட்ட நிலையில் வயல்வெளியில் கட்டிலுடன் மிகுந்த அச்சத்தில் இருந்த மூதாட்டியை கண்ட கிராம மக்கள் அவரை மீட்டனர்.

    இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    முன்னதாக ராஜஸ்தானின் சாவாய் மாதோபூர் நகரில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    Next Story
    ×