நெல்லை அருகே ராணுவவீரர் தவறி விழுந்து சாவு

செல்வகுமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.கால் தடுக்கி விழுந்ததில் செல்வக்குமாருக்கு பின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை அருகே ராணுவவீரர் தவறி விழுந்து சாவு
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை பெத்தேல்நகர் காலனி குடியிருப்பை சேர்ந்தவர் இசக்கிதுரை. இவரது மகன் செல்வகுமார் (வயது28). ராணுவ வீரரான இவர் அசாமில் பணிபுரிந்து வந்தார்.

தவறி விழுந்து சாவு

இவருக்கு திருமணமான நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது செல்வகுமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று இரவு செல்வகுமார், வீட்டின் படிக்கட்டில் கால் தடுக்கி விழுந்துள்ளார். இதில் செல்வக்குமாருக்கு பின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தனது தாயாரிடம் நலமாக இருப்பதாக கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து உள்ளார். இதன் பின்னர் செல்வகுமாரை அவரது தாய் சாப்பிடுவதற்காக கூப்பிட்ட போது அவர் எழுந்திருக்கவில்லை. அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com