என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குளச்சல் அருகே ராணுவ வீரரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
- தாக்குதலில் படுகாயமடைந்தவர் நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் கடுக்கா விளையை சேர்ந்தவர் தானேஸ்ராஜ் (வயது 53). இவர் அசாமில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகி றார்.
இவரது மனைவி ரம்யா. கல்லுக்கூட்டம் சந்திப்பில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இதன் திறப்பு விழாவுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் தானேஸ் ராஜின் நண்பர் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டார்.
இதற்கு வேம்படி விளை யை சேர்ந்த ஜாப்ரி ஜாண் (27) எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் அவர், தேனேஸ்ராஜின் நண்பர் ஆடினார்விளையில் செல்லும்போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தேனேஸ்ராஜ் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜாப்ரி ஜாண் கீழே கிடந்த கல்லை எடுத்து தேனேஸ்ராஜின் தலையில் அடித்து மிரட்டல் விடுத்தார். தாக்குதலில் படுகாய மடைந்த தேனேஸ் ராஜ் நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து குளச்சல் போலீசார் ஜாப்ரி ஜாண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






