search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர போராட்ட வீரர் உடுமலை எத்தலப்பர் நாயக்கருக்கு சிலை, அரங்கம் அமைக்க அனுமதி - கலெக்டர் தகவல்
    X

    கோப்புபடம்.

    சுதந்திர போராட்ட வீரர் உடுமலை எத்தலப்பர் நாயக்கருக்கு சிலை, அரங்கம் அமைக்க அனுமதி - கலெக்டர் தகவல்

    • திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
    • வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் மாதிரிபுகைப்படத்தினை அரசுக்கு அளித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடரில், 2021- 2022ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, வீரபாண்டிய கட்டபொம்மனை நயவஞ்சகமாகத் தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்குப் பாடம் புகட்டும் வகையில் தஞ்சையிலிருந்து திருப்பூர் மாவட்டம் தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆண்ட்ரூ கேதிஷ் என்ற ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர்நாயக்கர் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில் அவருக்கு உருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2 கோடியே 60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

    மேலும் மேற்படி அரங்கம் மற்றும் சிலை அமைத்திட ஏதுவாக, 2021-2022ம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் திட்ட மதிப்பீட்டினை திருப்பூர் கலெக்டர் மேலொப்பத்துடன் அனுப்பி வைக்குமாறும், முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற ஏதுவாக, ஐந்து மாதிரி வரைபடங்களையும் அனுப்பி வைக்குமாறும் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல முதன்மைதலைமைப் பொறியாளரிடமும் (கட்டடங்கள்) கேட்டுக்கொள்ளப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு திருப்பூர் மாவட்டத்தில் உருவச்சிலையும், அரங்கமும் அமைத்திட நிர்வாக அனுமதியளித்து ஆணை வெளியிடப்பட்டது.

    இந்தநிலையில் 2021-2022-ஆம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.2,60,00,000 (ரூ. 2கோடியே 60லட்சம் மட்டும்) திட்ட மதிப்பீட்டினை அனுப்பி வைத்து, அத்திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.திட்ட மதிப்பீட்டில் உள்ளடக்கியுள்ள முக்கிய பணிகளின் விவரம் பின்வருமாறு:-

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை வட்டம், தளி-2 கிராமம், மஜரா திருமூர்த்தி நகர், பொதுப்பணித்துறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள 0.80.98 ஹெக். நிலத்தினை தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு அரங்கம் அமைத்திடவும்,உருவச்சிலையினை உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் அமைத்திட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு முன்நுழைவு அனுமதி வழங்கியும் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரிபுகைப்படத்தினை, இணைத்தனுப்பி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளார்.மேலும் திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.2.53,26,974 க்கு நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×