search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volleyball match"

    • தேசிய கைப்பந்து போட்டி நடந்தது.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    நாகப்பட்டினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் பள்ளி கல்வித்துறை, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முத்து நடேஷ், நிதீஷ் குமார், மணிகண்டன் ஆகியோர் தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வாகினர். மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் கிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தலைமையாசிரியர் கண்ணன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பொன்னியின் செல்வன், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.
    • இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

    சேலம்:

    சேலம் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.

    19 வயதுக்கு உட்பட்ட இந்த போட் டியில் ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. முடிவில் பெண்கள் பிரிவில் சேலம் மற்றும் சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நேற்று மாலை விளையாடின. இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட் டத்தை தட்டி சென்றது. சென்னை அணி 2-ம் பரிசும், ஈரோடு அணி 3-ம் பரிசும் கிருஷ்ணகிரி அணி 4-ம் பரி சும் பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் கோவை மற்றும் நெல்லை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று மோதின. முடிவில் கோவை அணிமுதலிடமும், நெல்லை அணி இரண்டாம் இடமும் நாகை அணி மூன்றாம் இடமும், கிருஷ்ணகிரி அணி நான்காம் இடமும் பிடித்தன. இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கைப்பந்து அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலா தேவி, ரான்சன், லாரன்ஸ் பாஸ்கர், டாக்டர். செந்தில் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 1,500 பேர் கலந்து கொண்டு விளையாடினர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருப் பத்தூர் மாவட்ட அளவில் அரசு அலுவலர்களுக்கு முதல்- அமைச்சர்கோப்பைக்கான செஸ்-இறகுபந்து போட்டி தொடங்கியுள்ளது.

    செஸ்போட்டிதூயநெஞ்ச கல்லூரியிலும் இறகுபந்து போட்டி கருப்பனூரிலும் தொடங்கியது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து விளை யாடினார்.

    செஸ் போட்டிகளில் 81 அரசு துறை சார்ந்த பணி யாளர்களும், இறகு பந்து போட்டிகளில் 1,500 அரசு துறை சார்ந்த பணியாளர்களும் கலந்து கொண்டு விளையாடினர்.

    இதனை தொடர்ந்து பழைய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கு வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள் ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.

    முகாம் நடைபெறுவதை பார்வையிட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 35 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட் டைகள் மற்றும் மாணவர்களுக்கு ரூ3 லட்சம் மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட மன நல மருத்துவர் பிரபாவராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, மாவட்ட சதுரங்க கழக பொறுப்பாளர்கள் ஆனந்த், வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • மாணவர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடினார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    போட்டியை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு அறிமுகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மாணவ மாணவிகள் இங்கு நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டும் நோக்கம் அல்ல மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற வேண்டும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், அதற்கான பயிற்சியை தாங்கள் எடுத்து விளையாட வேண்டும் என்று கூறி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார். மாணவர்களுடன் கைப்பந்தும் விளையாடினார்.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேது ராஜன், கைப்பந்து கழக செயலாளர் அன்பரசன் உடன் இருந்தனர்.

    • மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.

    அலங்காநல்லூர்

    தேசிய அளவிலான சப்-ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக அணிக்கான அணித்தேர்வு தேவகோட்டையில் நடந்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா மகள் பிளஸ்-1 மாணவி ராகவி (16) கலந்து கொண்டு தமிழக அணிக்காக தேர்வாகி உள்ளார். இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். 

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் 8-வது மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துபோட்டி (பெண்கள் பிரிவு) கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
    • இதில் அண்ணா பல்கலைக்–கழகத்தின் கீழ் உள்ள 8-வது மண்டலத்தை சேர்ந்த 6 கல்லூரிகள் பங்கேற்றன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 8-வது மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துபோட்டி (பெண்கள் பிரிவு) கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

    பி.ஜி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமையில் கல்லூரி–யின் தாளாளர் கணபதி வரவேற்புரை ஆற்றினார். முதன்மையர் டாக்டர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.

    பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கவிதா மற்றும் சிறப்பு விருந்தினர் பரமத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ஆகியோர் கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

    இதில் அண்ணா பல்கலைக்–கழகத்தின் கீழ் உள்ள 8-வது மண்டலத்தை சேர்ந்த 6 கல்லூரிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் சேலம், ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரிகள் மோதின. அதில் சேலம் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் சேலம், சோனா பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் மோதியதில் சேலம் சோனா பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

    3-வது போட்டியில் சேலம் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி மற்றும் சேலம் அரசு பொறியியல் கல்லூரிகள் போட்டியிட்டன. அதில் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.

    4-வது போட்டியில் சோனா பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் கொங்குநாடு பொறியியல் கல்லூரிகள் போட்டியிட்டதில் சோனா பொறியியல் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றனர்.

    இறுதிப்போட்டியில் சோனா பொறியியல் கல்லூரி மற்றும் சேலம், ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி 35-51 என்ற புள்ளி கணக்கில் சோனா பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்து கோப்பையை வென்றது. ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி 2-ம் இடம் பிடித்தது. விழாவில் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், உடற் கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார்கள்.

    • தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
    • முதலிடம் பெற்ற நான்கு அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்

    சங்கரன்கோவில்:

    தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்கள்.

    ஆண்கள் மூத்தோர் பிரிவில் முதலிடமும், பெண்கள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆகிய மூன்று அணிகளும் முதலிடம், பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற நான்கு அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
    • மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தோ்வு செய்யப்படுவா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட அளவிலான இளையோா் பிரிவு வாலிபால் போட்டிக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வாலிபால் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் பிரிவு வாலிபால் போட்டிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு சிறுபூலுவபட்டியில் உள்ள திருப்பூா் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) மைதானத்தில் ஜூலை 24ந் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கேற்கும் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது வயதுச் சான்று, பிறப்புச் சான்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்பவா்கள் கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதிக்குப் பின் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகள் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வரும் ஆகஸ்ட் 6 ந் தேதி முதல் 9 ந்தேதி வரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தோ்வு செய்யப்படுவா் என்று தெரிவித்துள்ளாா்.

    ×