மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.முதலிடம் பெற்ற நான்கு அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்
போட்டியில் பங்குபெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
போட்டியில் பங்குபெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்கள்.

ஆண்கள் மூத்தோர் பிரிவில் முதலிடமும், பெண்கள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆகிய மூன்று அணிகளும் முதலிடம், பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற நான்கு அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com