கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.
கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு
Published on

அலங்காநல்லூர்

தேசிய அளவிலான சப்-ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக அணிக்கான அணித்தேர்வு தேவகோட்டையில் நடந்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா மகள் பிளஸ்-1 மாணவி ராகவி (16) கலந்து கொண்டு தமிழக அணிக்காக தேர்வாகி உள்ளார். இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com