என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்- அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
- மாணவர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடினார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
போட்டியை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு அறிமுகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மாணவ மாணவிகள் இங்கு நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டும் நோக்கம் அல்ல மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற வேண்டும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், அதற்கான பயிற்சியை தாங்கள் எடுத்து விளையாட வேண்டும் என்று கூறி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார். மாணவர்களுடன் கைப்பந்தும் விளையாடினார்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேது ராஜன், கைப்பந்து கழக செயலாளர் அன்பரசன் உடன் இருந்தனர்.
Next Story






