search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pickpocket"

    • திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் பர்சை, முதியவர் ஒருவர் திருடியது பரபரப்பை ஏற்படுத்தியது
    • கையெடுத்து மன்னிப்பு கேட்டு தப்பி சென்றார்

    திருச்சி, 

    திருச்சியில் எம்ஜிஆர் முழு உருவ வெண்கல சிலையை திறப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூ கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார் மூலம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அளிக்க வந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை முதியவர் ஒருவர் திருடினார்.இதை அருகில் இருந்து பார்த்தவர்கள் அவரை பிடித்தனர் உடனடியாக அவர் மறைத்து வைத்திருந்த பர்சை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த நிர்வாகிகளை கையெடுத்து கும்பிட்டு என்னை மன்னித்து விடுங்கள் என கூறியபடி அங்கிருந்து தப்பிச் சென்றார். முன்னாள் முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் பரிசை திருடிய சம்பவம் சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • திருவானைக்காவலில் துணிகரம்
    • ஸ்ரீரங்கம் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை

    திருச்சி,

    பெரம்பலூர் மாவட்டம் சொக்கநத்தம் அயனாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் சூரிய பிரகாசம் (வயது 28). இவர் திருவானைக்காவல் அழகிரிபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து இறங்கிய போது இரண்டு மர்ம நபர்கள் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர். இதுகுறித்து அவர் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் போலீசார் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
    • அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்து இரவு கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாகி பாபு கொடுத்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • டவுன் பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட்
    • ரூ.2 ஆயிரத்து 200- ஐ மர்மநபர்கள் ‘பிக்பாக்கெட்’ அடித்தனர்

    நெல்லை:

    மானூரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. தொழிலாளி. இவர் சம்பவத்தன்று டவுன் பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து மானூருக்கு செல்வதற்காக பஸ் ஏற நின்றார்.

    அப்போது அவரிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்து 200- ஐ மர்மநபர்கள் 'பிக்பாக்கெட்' அடித்தனர். இதையறிந்த அவர் சந்திப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இசக்கிமுத்துவிடம் பிக்பாக்கெட் அடித்தது சந்தி ப்பை சேர்ந்த பாக்கியராஜ் (வயது32), ராஜா (30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர் அருகே அரசு அரசு பஸ்சில் ஜேப்படி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 47). இவர் மதுரை வந்து விட்டு அரசு பஸ்சில் நெல்லைக்கு புறப்பட்டார்.

    விருதுநகர்-சாத்தூர் சாலையில் உள்ள வச்சக்காரப்பட்டி அருகே பஸ் சென்றபோது ராமநாதனிடம் 2 பேர் ஜேப்படி செய்ய முயன்றனர். இதனை உணர்ந்த அவர், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராமநாதன் புகாரின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1,370-ஐ பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது பெயர் மணிமாறன் (21) சுடலை (24) என்பதும், சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

    கோவையில் 5 வருடமாக பிக்பாக்கெட் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை காரமடையை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி அனிதாதேவி (வயது 33).

    இவர் கோவை உக்கடத்தில் இருந்து வடகோவை சென்ற பஸ்சில் ஒரு பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த போது தனிப்படை போலீசார் கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    இவர் கடந்த 5 ஆண்டுகளாக பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை பிக்பாக்கெட் அடித்தது தெரிய வந்தது.

    பயணிகளுக்கு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால், அடிக்கடி அழகு நிலையத்துக்கு சென்று முடிஅழகை மாற்றி, சிகை அலங்காரம் செய்துள்ளார். திருடிய பணத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.

    சுய உதவி குழு தலைவியாகவும் செயல்பட்ட இவர் வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

    சுய உதவி குழு மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் இதுவரை எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் திருடினார்? திருட்டு பணத்தை வேறு எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    முசிறி நகர பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த நான்கு பேரை முசிறி போலீசார் கைது செய்தனர்.

    முசிறி:

    முசிறி அடுத்த மாங்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(45). நேற்று முசிறியிலிருந்து மாங்கரைப்பேட்டை செல்வதற்காக முசிறி நகர பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக ரமேஷ் காத்திருந்தார்.

    அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் உட்பட 4 பேர் ரமேஷிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அவர் சத்தம் போட்டார். உடனே 4 பேரும் தப்பி ஓடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓடிய நான்கு பேரையும் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் விசாரணை மேற்கொண்டதில் பிக்பாக்கெட் அடித்தவர்கள் தொட்டியத்தை சேர்ந்த உஷா (32), முசிறியை சேர்ந்த ராஜா (45), செல்வராஜ்(52), பெரியசாமி (37) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பிக்பாக்கெட் அடித்த ரூ ஆயிரம் மீட்கப்பட்டது. ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பெண் உள்பட நான்கு பேரையும் கைது செய்தனர்.

    விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியில் பஸ் பயணியிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கும் போது அவரை இடித்துக்கொண்டு இறங்கிய 2 பெண்கள் அவரது பையில் கையை விட்டு அதில் இருந்த 1000 ரூபாயை திருட முயன்றனர்.

    இதனை பார்த்த அவர் அந்த 2 பெண்களையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 2 பேரும் திருவண்ணாமலை ஆவூர் பிள்ளையார் கோவில்தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவிகள் ஆதனா (28), சாந்தி (35) என்பதும், 2 பேரும் அக்காள்- தங்கைகள் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×