பர்சை திருடிய முதியவர்

திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் பர்சை, முதியவர் ஒருவர் திருடியது பரபரப்பை ஏற்படுத்தியதுகையெடுத்து மன்னிப்பு கேட்டு தப்பி சென்றார்
பர்சை திருடிய முதியவர்
Published on

திருச்சி, 

திருச்சியில் எம்ஜிஆர் முழு உருவ வெண்கல சிலையை திறப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூ கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார் மூலம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அளிக்க வந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை முதியவர் ஒருவர் திருடினார்.இதை அருகில் இருந்து பார்த்தவர்கள் அவரை பிடித்தனர் உடனடியாக அவர் மறைத்து வைத்திருந்த பர்சை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த நிர்வாகிகளை கையெடுத்து கும்பிட்டு என்னை மன்னித்து விடுங்கள் என கூறியபடி அங்கிருந்து தப்பிச் சென்றார். முன்னாள் முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் பரிசை திருடிய சம்பவம் சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com