என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரகிரி விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
- சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
- அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்து இரவு கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாகி பாபு கொடுத்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






