search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Person"

    • கல்லிடைக்குறிச்சியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப்
    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மேல்நிலைப்பள்ளி அருகே வெள்ளங்குழியைச் சேர்ந்த சரவணன் முருகன் என்ற முருகன் சேட் ( வயது 40), தெற்கு கல்லிடைக்குறிச்சி தெற்கு பகுதியைச் சேர்ந்த பலவேசம் (வயது 36) ஆகிய இருவரும் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சரவண முருகன் என்ற முருகன் சேட், பலவேசம் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 1,290 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.

    • டவுன் பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட்
    • ரூ.2 ஆயிரத்து 200- ஐ மர்மநபர்கள் ‘பிக்பாக்கெட்’ அடித்தனர்

    நெல்லை:

    மானூரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. தொழிலாளி. இவர் சம்பவத்தன்று டவுன் பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து மானூருக்கு செல்வதற்காக பஸ் ஏற நின்றார்.

    அப்போது அவரிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்து 200- ஐ மர்மநபர்கள் 'பிக்பாக்கெட்' அடித்தனர். இதையறிந்த அவர் சந்திப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இசக்கிமுத்துவிடம் பிக்பாக்கெட் அடித்தது சந்தி ப்பை சேர்ந்த பாக்கியராஜ் (வயது32), ராஜா (30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • சாத்தான்குளம் அருகே ஜே.சி.பி.எந்திரத்தில் டீசல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 50 லிட்டர் டீசலை திருடிக் கொண்டு சென்று விட்டனர்

    சாத்தான்குளம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசரடி பகுதியை சேர்ந்த கொம்பு ராஜ் என்பவர் சாத்தான்குளம் அருகே உள்ள பிரகாசபுரத்திலிருந்து சாலைபுதூர் வரை செல்லும் கால்வாய் தோண்டும் பணியை காண்ட்ராக்ட் எடுத்துள்ளார்.

    இந்த பணியில் திருவண்ணாமலை சேர்ந்த கந்தன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் உள்பட 17 பேர் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று கந்தனும், ஹேமந்த் குமாரும் கால்வாய் பணிக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரங்களில் இருந்து 50 லிட்டர் டீசலை திருடிக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து கொம்புராஜிடம் மற்ற பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் போலீசில் புகார் செய்தார்.


    சப்-இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி கந்தன், ஹேந்த்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட 50 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.


    ×