சாத்தான்குளம் அருகே ஜே.சி.பி.எந்திரத்தில் டீசல் திருடிய 2 பேர் கைது

சாத்தான்குளம் அருகே ஜே.சி.பி.எந்திரத்தில் டீசல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.50 லிட்டர் டீசலை திருடிக் கொண்டு சென்று விட்டனர்
சாத்தான்குளம் அருகே ஜே.சி.பி.எந்திரத்தில் டீசல் திருடிய 2 பேர் கைது
Published on

சாத்தான்குளம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசரடி பகுதியை சேர்ந்த கொம்பு ராஜ் என்பவர் சாத்தான்குளம் அருகே உள்ள பிரகாசபுரத்திலிருந்து சாலைபுதூர் வரை செல்லும் கால்வாய் தோண்டும் பணியை காண்ட்ராக்ட் எடுத்துள்ளார்.

இந்த பணியில் திருவண்ணாமலை சேர்ந்த கந்தன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் உள்பட 17 பேர் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று கந்தனும், ஹேமந்த் குமாரும் கால்வாய் பணிக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரங்களில் இருந்து 50 லிட்டர் டீசலை திருடிக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து கொம்புராஜிடம் மற்ற பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி கந்தன், ஹேந்த்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட 50 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com