தொழிலாளியிடம் 'பிக்பாக்கெட்'- 2 வாலிபர்கள் கைது

டவுன் பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட்ரூ.2 ஆயிரத்து 200- ஐ மர்மநபர்கள் ‘பிக்பாக்கெட்’ அடித்தனர்
தொழிலாளியிடம் 'பிக்பாக்கெட்'- 2 வாலிபர்கள் கைது
Published on

நெல்லை:

மானூரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. தொழிலாளி. இவர் சம்பவத்தன்று டவுன் பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து மானூருக்கு செல்வதற்காக பஸ் ஏற நின்றார்.

அப்போது அவரிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்து 200- ஐ மர்மநபர்கள் 'பிக்பாக்கெட்' அடித்தனர். இதையறிந்த அவர் சந்திப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இசக்கிமுத்துவிடம் பிக்பாக்கெட் அடித்தது சந்தி ப்பை சேர்ந்த பாக்கியராஜ் (வயது32), ராஜா (30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com