search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைத்து"

    • பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

    சுதாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. சுப்பிரமணி மளிகை கடையில் நேற்று இரவு 10 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்த சுதாகரனுக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்களும், செல்போன் கடையில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
    • ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் வேணுகோபால்( வயது 37). இவர் பல்லடம் - பூமலூர் ரோட்டில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு, வீடு சென்ற அவர் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த கல்லாப்பெட்டி பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இந்த திருட்டு குறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சேலம், வேலு நகரில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகரில் பஸ் ஸ்டாப் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்பு வழக்கம்போல பூஜாரி கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்து. மேலும் அதில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற அறிந்த கோயில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசில் புகார் அப்படி சொன்னார்.அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×