வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டார்.
வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
Published on

புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே வையாபுரி விளக்கு ரோட்டில் வசித்து வருபவர் லட்சுமணன் மனைவி மல்லிகா(வயது 53) . இவர்அரசமலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.

மல்லிகா வீட்டை பூட்டிவிட்டு டீக்கடைக்கு சென்றுவிட்டார். அப்போது மூத்த மருமகள் நித்தியகல்யாணி என்பவர் மல்லிகாவிடம் சாவியை வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு அதிரச்சிஅடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 7பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ5ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து புகாரின் பேரில் காரையூர் போலீசார் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com