search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "broken"

    • கரூர் மாவட்டம்தோட்டக்குறிச்சி அருகே உடைந்து விழுந்த மின்கம்பம்
    • இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

     வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு செல்லும் உயர் அழுத்த மின் பாதையில், வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்த ஒரு மின் கம்பம் திடீரென சாய்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று உடைந்த மின் கம்பத்தை, அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நிறுத்தினர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    • நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
    • ரவிக்குமார் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40). இவர் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் அவரது வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் யாரோ காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் ரவிக்குமார் வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர் பாஸ்கரன், வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 53 மற்றும் 54-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் 53-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தலைமையில் இன்று மாநகராட்சி குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் காலனி, மகிழ்ச்சி நகரில் உள்ள தரைதள நீர் தேக்க தொட்டிக்கு சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பம்பிங் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் அடிக்கடி உடைப்பு, அதே போன்று தரை தள நீரேற்று தொட்டியில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குழாய்களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.

    இது தொடர்பாக மண்டல அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், போனை எடுப்பதில்லை. எனவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், வருகிற 18-ந் தேதி வ.உ.சி குருபூஜை விழா நடைபெற உள்ளது. எனவே மணி மண்டபத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • சேலம் டவுன் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக இருப்பவர் பாண்டியன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசிய படியே வந்தார்.
    • இதனைப் பார்த்த பாண்டியன் அவரை பஸ் நிலையம் அருகில் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லலாமா என்று கேட்டார். வாக்குவாதம் முற்றிலும் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், பாண்டியன் மூக்கில் ஓங்கி குத்தினார் .

    சேலம்:

    சேலம் டவுன் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக இருப்பவர் பாண்டியன். இவர் இன்று காலை பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சேலம் அம்மாபேட்டை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசிய படியே வந்தார்.

    இதனைப் பார்த்த பாண்டியன் அவரை பஸ் நிலையம் அருகில் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லலாமா என்று கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது .வாக்குவாதம் முற்றிலும் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், பாண்டியன் மூக்கில் ஓங்கி குத்தினார் .

    இதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .பின்னர் சம்பவம் குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் ஏட்டு பாண்டியனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோகுல் ராஜனை சேலம் டவுன் போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் ஏட்டு கோகுல்ராஜ் சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா சந்தித்து நலம் விசாரித்தார்.

    சேலம் மாநகரில் போக்குவரத்து போலீசாரை வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தூத்துக்குடி பொட்டல் காட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ் ( வயது 26), நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் விபத்தில் பலியானார்
    • பொட்டல்காடு அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பொட்டல் காட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ் ( வயது 26), நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் விபத்தில் பலியானார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஜெகதீசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    உடலை ஒப்படைத்து விட்டு ஆம்புலன்ஸ் திரும்பி வந்து கொண்டிருந்தது. பொட்டல்காடு அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர்.

    இதில் ஆம்புலன்சின் கண்ணாடி உடைந்து தேசமாகின.

    இது தொடர்பாக டி.எஸ்.பி. சத்தியராஜ். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 'எல் அண்ட் டி' திட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
    • அடிக்கடி பழுது பார்ப்பதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் ராயர்பாளையத்தில் பஸ் நிறுத்தம் அருகே, பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டின் வழியாக செல்லும் 'எல் அண்ட் டி' திட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து ஏராளமான தண்ணீர் ரோட்டில் வழிந்தோடி வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- திருப்பூர் ரோட்டில், பனப்பாளையம் முதல் மகாலட்சுமி நகர் வரை, ஏராளமான இடங்களில் 'எல் அண்ட் டி' குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பழுது பார்ப்பதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன், குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பள்ளம் உருவாகி, வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகினர். அதுபோல், ராயர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று முதல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

    இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது, அதேஇடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வீணாவது ஒருபுறம் இருக்க, ரோடு சேதமடைவதுடன், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போனது.
    • கண்காணிப்பு காமிராவில் பதிவான கொள்ளையர் உருவத்தை வைத்து விசாரணை நடந்த வருகின்றது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னுசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18- ந் தேதி இரவு 10 மணி அளவில் தனது மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த உறவினர் வீட்டு காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

    பின்னர் விழா முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.50,000 பணம், அரை பவுன் மோதிரம், 1 விவோ செல்போன் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் நோட்டமிட்டு வீடு புகுந்து செல்போன், பணம், நகைகள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் , செல்போன், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் அந்த பகுதியில் நடமாடும் காட்சி கேமரா வில் பதிவாகி உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர். 

    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் 3 உண்டியல்களை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறந்து பணம், நகைகள் கணக்கிடப்படும்.  ஒரு உண்டியல் அன்னதான திட்டத்திற்காக   பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதிகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அன்னதானம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்கு வந்த திருடர்கள் கண்காணிப்பு காமிராக்களை  வேறு திசையில் திருப்பி விட்டு உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர்.   

    அப்போது அன்னதான உண்டியலை தவிர மற்ற 3 உண்டியல்களுக்கும் அலாரம் இணைப்பு கொடுக்கப்பட்டு  இருந்தது. இதனால் அந்த உண்டியல்களை உடைத்தால் மாட்டி விடுவோம் என கருதி  அன்னதான உண்டியலை மட்டும் உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள்  கொள்ளையடித்தனர்.

    காலையில் கோவிலுக்கு வந்த பூசாரிகள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை  கண்டு அதிகாரிகளுக்கும், போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.   சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த அதிகாரிகள்,  கொள்ளையடிக்கப்பட்ட  அன்னதான உண்டியல் கடந்த 25-ந்தேதி திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டது. 

    இதனால்  தற்போது பெரிய அளவில் காணிக்கை பணம் இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

    அலாரம் இணைக்கப்பட்டு இருப்பதால் மற்ற 3 உண்டியல்களில் உள்ள பணம், நகை தப்பியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கொள்ளை சம்பவம் குறித்து  அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை.
    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 61). இவர் தனக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு தற்போது அரூர் பகுதியில் வசித்து வருகிறார். 

    இன்று காலை அக்கம்பக்கத்தினர் இவரது வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனடியாக  இது குறித்து தமிழழகன்க்கு  தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவரது மனைவி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் ஆகிய பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.  

    இதுகுறித்து  கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.    
    ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரணி:

    ஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் வந்தவாசி செல்லும் சாலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ATM #ATMBroken
    சென்னை:

    திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் இயங்கி வரும் இந்த மையத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.

    எந்திரத்தை உடைத்து அதில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்து இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளையர்கள் நீண்ட நேரம் போராடி, முயற்சி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் கண்ணாடி கதவினை உடைத்து சென்றுள்ளனர்.

    இதுபற்றி திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஏ.டி.எம். மையத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் உள்ள கேமராவை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சியில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தற்கான காரணம் என்ன?

    பொதுமக்கள் யாரும் வந்ததால் முயற்சியை கைவிட்டு ஓடினார்களா? குடிபோதையில் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. #ATM #ATMBroken
    திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே தொண்டமான்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. திருவெறும்பூர், காட்டூர் பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய விற்பனையாளர்கள் சிலர் இந்த கடைக்கு மாற்றப்பட்டனர். அதன்படி தொண்டமான்பட்டி கடையில் 5 பேர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையின் ஷட்டரை பூட்டி விட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை டாஸ்மாக் கடை வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் அதன் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த டாஸ்மாக் கடைக்கு சென்று கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை வரவழைத்து உள்ளே சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்டில்களில் சிலவற்றை அங்குள்ள வயல்வெளியில் வைத்து குடித்து விட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றிருப்பதும், மீதி பாட்டில்களை தூக்கி சென்றதும் தெரிய வந்தது. சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையில் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×