என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு -போலீசார் விசாரணை
- தூத்துக்குடி பொட்டல் காட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ் ( வயது 26), நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் விபத்தில் பலியானார்
- பொட்டல்காடு அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பொட்டல் காட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ் ( வயது 26), நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் விபத்தில் பலியானார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெகதீசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடலை ஒப்படைத்து விட்டு ஆம்புலன்ஸ் திரும்பி வந்து கொண்டிருந்தது. பொட்டல்காடு அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர்.
இதில் ஆம்புலன்சின் கண்ணாடி உடைந்து தேசமாகின.
இது தொடர்பாக டி.எஸ்.பி. சத்தியராஜ். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






