பல்லடம் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்

'எல் அண்ட் டி' திட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அடிக்கடி பழுது பார்ப்பதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது.
சாலையில்  வீணாக செல்லும்   தண்ணீர்.
சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்.
Published on

பல்லடம் :

பல்லடம் ராயர்பாளையத்தில் பஸ் நிறுத்தம் அருகே, பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டின் வழியாக செல்லும் 'எல் அண்ட் டி' திட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து ஏராளமான தண்ணீர் ரோட்டில் வழிந்தோடி வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- திருப்பூர் ரோட்டில், பனப்பாளையம் முதல் மகாலட்சுமி நகர் வரை, ஏராளமான இடங்களில் 'எல் அண்ட் டி' குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பழுது பார்ப்பதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன், குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பள்ளம் உருவாகி, வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகினர். அதுபோல், ராயர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று முதல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது, அதேஇடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வீணாவது ஒருபுறம் இருக்க, ரோடு சேதமடைவதுடன், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com