நெகமம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு

நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர். ரவிக்குமார் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நெகமம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40). இவர் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

சம்பவத்தன்று இரவு இவர் அவரது வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் யாரோ காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

மறுநாள் காலையில் ரவிக்குமார் வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com