search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "melapalayam"

    • நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி மேலப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்மாற்றியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மேலப்பாளையம் மெயின் பஜார் பகுதியில், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், நெல்லை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன் வழிகாட்டுதலின் படியும் வருங்கால மின் நுகர்வோர்களை கருத்தில் கொண்டும் சீரான மின் வினியோகம் வழங்க நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் காளிதாசன், உதவி செயற் பொறியாளர் சிதம்பரவடிவு , உதவி மின் பொறியாளர்கள் ரத்தினவேணி, கார்த்திக்குமார், ஜன்னத்துல் ஷிபாயா, வளர்மதி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பி னர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்ப ட்டது. கூடுதலாக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.எல்.ஏ. ஆதித்தன், சிறுபான்மை பிரிவு மகபூப் ஜான், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, அண்ணா தொழிற்சங்கம் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் பாசறை சம்சு சுல்தான், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்ணேஷ் மற்றும் பகுதி, வட்ட செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாராயண பெருமாள் மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 2 நாட்களாக நாராயண பெருமாள் வீடு திறக்கப்படாமல் இருந்தது.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச் சந்தையை சேர்ந்தவர் நாராயண பெருமாள் (வயது25). எக்ட்ரீசியன். இவர் நெல்லை மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களாக இவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் மேலப்பா ளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது நாராயண பெருமாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • நாராயணன் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் செய்துங்க நல்லூரை சேர்ந்த தொழிலாளி நாராயணன் (வயது 55) என்பதும், மதுபாட்டி ல்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த தும் தெரிய வந்தது. அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டி உள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 2,800-ஐ பறிமுதல் செய்தனர்.

    • பல்வேறு போரட்டங்கள் நடத்தியதன் விளைவாக கழிவு நீரோடை அமைக்கும் பணி நடைபெற்றது.
    • மழைநீர் செல்ல வழி இல்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்ட லத்திற்கு உட்பட்ட 52-வது வார்டு ரெட்டியார்பட்டி சாலையில் ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் இடுப்பளவு தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி இருந்தது.

    கடந்த 3 ஆண்டுகளாக இதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு போரட்டங்கள் நடத்தியதன் விளைவாக ரூ. 95 லட்சம் மதிப்பில் கழிவு நீரோடை அமைக்கும் பணி நடைபெற்றது. அல் மதினா பள்ளிக்கூடம் முதல் நடை பெற்று வந்த பணி தாய்நகர் கடைசியில் ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் காரணமாக திடீரென ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் கரீம் நகர், தாய்நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கழிவு நீரோடை முழுவதும் தண்ணீரால் நிரம்பி சாலை எது, ஓடை எது என தெரியாத நிலை உள்ளது. இதன் காரணமாக ரெட்டியார்பட்டி சாலை ஓடையில் வாகனங்கள் சிக்கி சிரமப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இங்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் இரு கரைகளிலும் செம்மண் கொண்டு நிரப்பப்படாததால் சாலையும் சேதம் அடைந்து உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கழிவு நீரோடை அமைத்தும், அது முழுமை பெறாததால் அரசின் நிதி வீணாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் டவுன் குற்றாலம் சாலையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கழிவு நீரோடை மற்றும் எஸ்.என். ஹைரோடு 2 பக்கங்களிலும் அமைக்கப்பட்ட கழிவு நீரோடையும், திட்டமிட்டு கட்டப்படாததால் பொது மக்களின் வரிப்பணம் விரயம் செய்யப்பட்டது என புகார் எழுந்தது.

    எனவே மாநகராட்சி கமிஷனர் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை போர்க்கால அடிப்படையில் இடித்து மீதமுள்ள கழிவு நீர் ஓடையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • வீட்டுக்குள் சென்ற முத்து சரவணன், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார்.
    • மேலப்பாளையம் போலீசில் அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்தார்.

    நெல்லை:

    மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மகன் முத்து சரவணன்(வயது 21). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று 28 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் தூங்கி கொண்டி ருந்தார்.

    அதனை கண்ட முத்து சரவணன், வீட்டுக்குள் சென்று அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த வர்கள் ஓடி வந்தனர். இதனால் முத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்து சரவணனை கைது செய்தனர். 

    • செல்வக்குமார் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
    • செல்வக்குமார் கடன் வாங்கியதால் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் குறிச்சி ஆண்டவர் 1-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 47). இவர் நெல்லை-அம்பை சாலையில் காட்டு புதுத்தெருவில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    தற்கொலை

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி சுப்பு லெட்சுமியை அழைத்துக்கொண்டு சென்று அவரது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு மறுநாள் காலை செல்வக்குமார் வீடு திரும்பி உள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

    இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடன் தொல்லை?

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சமீபத்தில் செல்வக்குமார் லோன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்துவதற்கு கடன் வாங்கியதால் சிரமம் அடைந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கடன் பிரச்சினை யில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    • அடிப்படை வசதிகளை செய்து தர கோரியிருந்த அந்த மனுவில் சிறுமியின் கைரேகை இடம்பெற்றிருந்தது.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அங்கன்வாடி பள்ளி

    நெல்லை மேலப்பா ளையம் ஞானியாரப்பா சின்னத் தெருவை சேர்ந்த ரசூல் காதர் என்பவரது மகள் சபா ஹாதியா (வயது 3) என்பவர் தனது தந்தையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் அம்பிகாபுரத்தில் ஒரு அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 10 மாதங்களாக நான் படித்து வருகிறேன். எங்கள் அங்கன்வாடி, ஆதி திராவிடர் அரசு உதவி பெறும் பள்ளியின் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், சத்துணவு, சத்துமாவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அங்கன்வாடியில் வழங்கப்பட்டாலும் எங்களது வகுப்பு கட்டி டங்கள் பழமையானதாக உள்ளது.

    அடிப்படை வசதிகள்

    எங்களது அங்கன்வாடி பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறோம். எனவே எங்களுக்கு தனியாக அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும். குடிநீர், கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அந்த மனுவில் சிறுமியின் கைரேகை இடம்பெற்றிருந்தது.

    சுடுகாடு நடைபாதை

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் கொடுத்த மனுவில், பாளை யூனியனுக்குட்பட்ட வேப்பன்குளம் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 2 சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட 2 சுடுகாடுகள் அருகருகே அமைந்துள்ளது.

    ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு நடைபாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக மற்றொரு தரப்புக்கு சொந்தமான சுடுகாடு நடைபாதை வழியே செல்ல வேண்டி உள்ளது. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே சுடுகாடு நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    முறைகேடு புகார்

    தமிழ் தேசிய கட்சியினர் ஆரோன் செல்லத்துரை தலைமையில் மனுவில், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இதே போல் பல்வேறு தரப்பினரும் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை வழங்கினர்.

    • மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • இதேபோல் தச்சநல்லூர் துைண மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதன்படி மேலப்பா ளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர்,

    கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என்.கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதி ப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

    தச்சநல்லூர்

    இதேபோல் தச்சநல்லூர் துைண மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான தச்ச நல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் வெங்க டேஷ்மணி தெரிவித்துள்ளார்.

    • ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே மேலப்பாளையம் பிரிவுகள் 1 மற்றும் 2 அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
    • அம்பாசமுத்திரம் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் கனரா வங்கி அருகில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் சந்திப்பு உப கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே மேலப்பாளையம் பிரிவுகள் 1 மற்றும் 2 அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

    தற்பொழுது நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் கனரா வங்கி அருகில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவி மின் பொறியாளர்கள் கார்த்திக்குமார், ரத்தினவேணி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மேலப்பாளையம் ரோஸ்நகரை சேர்ந்த ஜெனி சாமுவேல் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார்.
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    மேலப்பாளையம் ரோஸ்நகரை சேர்ந்தவர் ஜெனி சாமுவேல் (வயது 22). இவர் மேலப்பாளையத்தில் கடை நடத்தி வருகிறார்.

    இன்று அதிகாலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.21,500 கொள்ளை போயிருந்தது. மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து அவர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலப்பாளையம் அருகே மாயமான 2 இளம்பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி ஆண்டவர் 3-வது தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் கனகா (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம், பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலப்பாளையம் அருகே உள்ள வள்ளுவர்நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தா (22). இவர் தனது அக்காள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது தாய் சுப்புலெட்சுமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்கள் எங்கு சென்றார்கள் என தேடி வருகின்றனர். 
    ×