மதுபோதையில் அண்ணனை தாக்கிய வாலிபர் கைது

மேலப்பாளையம் மில்லத் நடுத்தெருவை சேர்ந்தவர் நஜிமுனிஷா (வயது52). மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ரபிக்கை கைது செய்தனர்.
மதுபோதையில் அண்ணனை தாக்கிய வாலிபர் கைது
Published on

நெல்லை:

மேலப்பாளையம் மில்லத் நடுத்தெருவை சேர்ந்தவர் நஜிமுனிஷா (வயது52). இவரது மகன் ஜெய்னுல் ரபிக் (27). இவர் தினமும் குடித்துவிட்டு குடிபோதையில் வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல ஜெய்னுல் ரபிக் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். அதனை அவரது சகோதரர் அன்சர் அலி பாதுஷா (29) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய்னுல் ரபிக், அன்சர் அலி பாதுஷாவை அங்கிருந்த கிரைண்டர் கல்லால் தாக்கினார். இதில் அவர் பலத்த காய மடைந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் எபினேசர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ரபிக்கை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com