மேலப்பாளையத்தில் கறிக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

செல்வக்குமார் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.செல்வக்குமார் கடன் வாங்கியதால் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மேலப்பாளையத்தில் கறிக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி ஆண்டவர் 1-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 47). இவர் நெல்லை-அம்பை சாலையில் காட்டு புதுத்தெருவில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

தற்கொலை

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி சுப்பு லெட்சுமியை அழைத்துக்கொண்டு சென்று அவரது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு மறுநாள் காலை செல்வக்குமார் வீடு திரும்பி உள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடன் தொல்லை?

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சமீபத்தில் செல்வக்குமார் லோன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்துவதற்கு கடன் வாங்கியதால் சிரமம் அடைந்த தாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடன் பிரச்சினை யில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com