search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meat shop"

    • சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகே நடத்தப்படும் இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்
    • இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக மனுதாரர் தெரிவித்தார்

    சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகே நடத்தப்படும் இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவற்றிற்கு உத்தரவிடக் கோரி, கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ அகில பாரதிய சுத் ஹர்ம் ஜெயின் சன்ஸ்க்ருதி ரக்ஷக் அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "கோவில் அருகில் இறைச்சிக் கடை அமைக்கக் கூடாது என எந்த சட்டமோ, விதிகளோ இல்லாதபோது நீதிமன்றம் எப்படி உத்தரவிடமுடியும் என கேள்வி எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக கூறிய, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவுக்கு இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
    • புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்(வயது39).

    இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எங்கள் கடைக்கு சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த செந்தில்மோகன் என்பவர் வந்தார்.

    அவர் தான் சென்னையில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், எனக்கு மொத்தமாக சிக்கன் சப்ளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி நாங்கள் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.

    இதுவரை சப்ளை செய்த சிக்கனுக்கு ரூ.47 லட்சத்து 37 ஆயிரத்து 999 செந்தில்மோகன் தர வேண்டும். ஆனால் அவர் இதுவரை பணத்தை தரவில்லை.

    இதுகுறித்து அவரிடம் கேட்டால் விரைவில் தருகிறேன் என்றார்.

    இந்நிலையில், கடந்த 10 மாதமாக செந்தில்மோகன் சிக்கன் வாங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் சென்னைக்கு சென்று அவர் கூறிய இடத்திற்கு சென்றேன்.

    அப்போது அங்கு அவர் சொல்லிய சிக்கன் கடை இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

    எனவே சிக்கன் வாங்கி விட்டு ரூ.47.37 லட்சம் மோசடி செய்த செந்தில்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வக்குமார் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
    • செல்வக்குமார் கடன் வாங்கியதால் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் குறிச்சி ஆண்டவர் 1-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 47). இவர் நெல்லை-அம்பை சாலையில் காட்டு புதுத்தெருவில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    தற்கொலை

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி சுப்பு லெட்சுமியை அழைத்துக்கொண்டு சென்று அவரது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு மறுநாள் காலை செல்வக்குமார் வீடு திரும்பி உள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

    இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடன் தொல்லை?

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சமீபத்தில் செல்வக்குமார் லோன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்துவதற்கு கடன் வாங்கியதால் சிரமம் அடைந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கடன் பிரச்சினை யில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.
    • கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரை விற்கப்பட்டது.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடப் பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கல் கொண் டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை தினத்தில் பொதுவாக அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மறுநாள் மாட்டு பொங்கல் நாளில் தான் அசைவ உணவு எடுத்து கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் இன்று அனைவரின் வீடுகளிலும் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி சமைப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பொங் கல் வந்ததால் அசைவ பிரியர்கள் எடுத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பதிலாக இன்று அசைவ உணவு சமைக்கும் வகையில் அதிகாலையிலே இறைச்சி கடைகளில் குவிந்தனர்.

    ஆடு, கோழி, மாடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டன. காலையி லேயே வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.

    நெல்லையில் டவுன், தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், சீவலப்பேரி சாலை உள்பட அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் தேவைக்கேற்ப இறைச்சி கடைகள் முழு அளவில் செயல்பட்டன.

    நேற்று இரவே இறைச்சி கடைகளுக்கு ஆட்டு தொட் டியில் இருந்து இறைச்சி வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன.

    பண்டிகையையொட்டி இறைச்சி விலை உயர வில்லை. கோழி இறைச்சி கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரையிலும் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கும் விற்கப்பட்டது.

    ×