மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு பணி - மேலப்பாளையம் மண்டலத்தில் கூடுதல் மையம் திறப்பு

ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே மேலப்பாளையம் பிரிவுகள் 1 மற்றும் 2 அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. அம்பாசமுத்திரம் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் கனரா வங்கி அருகில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது
ஆதார் இணைப்பு பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்
ஆதார் இணைப்பு பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்
Published on

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் சந்திப்பு உப கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே மேலப்பாளையம் பிரிவுகள் 1 மற்றும் 2 அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் கனரா வங்கி அருகில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவி மின் பொறியாளர்கள் கார்த்திக்குமார், ரத்தினவேணி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com