மேலப்பாளையம் அருகே பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது

வீட்டுக்குள் சென்ற முத்து சரவணன், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார்.மேலப்பாளையம் போலீசில் அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்தார்.
மேலப்பாளையம் அருகே பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது
Published on

நெல்லை:

மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மகன் முத்து சரவணன்(வயது 21). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று 28 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் தூங்கி கொண்டி ருந்தார்.

அதனை கண்ட முத்து சரவணன், வீட்டுக்குள் சென்று அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த வர்கள் ஓடி வந்தனர். இதனால் முத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்து சரவணனை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com