என் மலர்
நீங்கள் தேடியது "temple hundi"
- கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
- விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்தனர்.
சந்தவாசல்:
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 65), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி.
இவர் கண்ணமங்கலம் அருகே உள்ள மங்களாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு விஜயன் ஆளானார்.
இந்த நிலையில் மே 2-ந் தேதி படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய விஜயன் வந்தார். தரிசனம் முடிந்து கையில் வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நில பத்திரத்தை உண்டியலில் போட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.
இன்று காலை ரேணுகாம்பாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற இருந்தது. இதனை அறிந்த விஜயன் கோவிலுக்கு வந்தார். கோவில் ஊழியர்களிடம் உண்டியலில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரம் உள்ளது.
அதனை முறையாக கோவிலுக்கு மாற்றி எழுதி தருவதாகவும் கூறினார். இதனை கேட்டு கோவில் ஊழியர்கள், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு கதறி அழுதனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது
- சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்துக் கொண்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் வந்தவாசி செல்லும் சாலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






