பாளையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளதுசாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பாளையில்  கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
Published on

நெல்லை:

பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்துக் கொண்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com