கார்மென்ட்ஸ் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

சேலம் சூரமங்கலம் அப்பாவு நகர் பகுதியில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் பூட்டை உடைத்து கொள்ளையடித்தனர்.சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கார்மென்ட்ஸ் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் தியாக பரமம் தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 54).

இவர் அப்பாவு நகர் பகுதியில் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார்.இந்த நிறுவனத்தை ராசிபுரம் பகுதிக்கு மாறுதல் செய்வதற்காக கடந்த 6 மாத காலமாக பூட்டி வைத்திருந்தார். நேற்று காலை சென்றபோது நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மின்மோட்டார் உட்பட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தீனதயாளன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com