search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempted"

    • திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜ பாளையம் சென்றுவிட்டார்
    • மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளான்.

    அவினாசி:

    அவினாசி வ.உ.சி., காலனியில்வசித்து வருபவர் உமேஷ் (வயது 63). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜ பாளையம் சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று பக்கத்துவீட்டுகாரர் இவருக்கு போன் மூலம் சமையல் அறை கதவு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார். எனவே வீட்டிற்குள் சென்று பார்க்குமாறு அவரிடம் உமேஷ் கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பீரோ, ரேக், ஆகியவற்றை திறந்து பணம், நகைகளை திருட முயன்றுள்ளதும், நகைகள் ஏதும் இல்லாததால் தப்பி சென்றுள்ளனர்.

    மேலும் வீட்டில் உள்ள சாமி படத்திற்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் தப்பியது.

    இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மாணவியி ன் தாய் பள்ளிக்கு சென்றார். ஆசிரியையை சந்தித்து பேசினார்.
    • இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவைஅருகே உள்ள சூலூரை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கணக்கு பாடம்

    மாணவி நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனையடுத்து மாணவியிடம் கணித ஆசிரியை பெற்றோர் அழைத்து வரும்படி கூறினார்.

    சம்பவத்தன்று மாணவியி ன் தாய் பள்ளிக்கு சென்றார். ஆசிரியையை சந்தித்து பேசினார்.

    பின்னர் பள்ளி விடும் நேரம் என்பதால் தனது மகளை அழைத்து செல்லலாம் என்பதற்காக பள்ளி அருகே உள்ள பெருமாள கோவிலில் காத்திருந்தார்.

    சாணிப்பவுடர்

    பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவியின் வாய் மஞ்சள் நிறத்தில் இருந்தது. இதனை பார்த்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் என்ன வென்று கேட்டார். அப்போது மாணவி கணக்கு பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் பள்ளியில் வைத்து மஞ்சள் சாணிப்பவுடரை கரைத்து குடித்ததாக தெரிவித்தார்.

    இதனையடுத்து மாணவியை அவரது தாய் சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (வயது 63). அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் வெளியூரில் உள்ளதால் அடி க்கடி வீட்டை பூட்டி விட்டு ஆறுமுகம் வெளியூருக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து ஆறுமு கத்தின் உறவினர் அந்த வழியாக வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

    கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. ஆனால் அங்கு பணம் மற்றும் நகைகள் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் விரக்தியடைந்து குமார் தற்கொலைக்கு முயன்றார்.
    • இதையடுத்து தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (23). கார்பெண்டர். இவர் சிறிய வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் குமார் அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்கார ணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த குமார் நேற்று இரவு சூளை அருகே உள்ள குரங்கன்பள்ளம் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கம்பியில் சிக்கி கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×