தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு

சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் விரக்தியடைந்து குமார் தற்கொலைக்கு முயன்றார்.இதையடுத்து தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (23). கார்பெண்டர். இவர் சிறிய வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் குமார் அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்கார ணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த குமார் நேற்று இரவு சூளை அருகே உள்ள குரங்கன்பள்ளம் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கம்பியில் சிக்கி கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com