கார் உதிரி பாகங்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் கார் உதிரி பாகங்கள் விற்கும் கடையில் கொள்ளையடித்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
கார் உதிரி பாகங்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் நாராயணன் (வயது 27) இவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் கார்களுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற அவர் நேற்று மதியம் வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.அதே போல் இவரது கடைக்கு அருகில் ஏழுமலை என்பவரின் கண்ணாடி கடையில் இருந்த 85 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com