வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
Published on

புஞ்சை புளியம்பட்டி:

புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com