வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த 2 பேர் கைது

திருவானைக்காவலில் துணிகரம்ஸ்ரீரங்கம் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை
வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த 2 பேர் கைது
Published on

திருச்சி,

பெரம்பலூர் மாவட்டம் சொக்கநத்தம் அயனாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் சூரிய பிரகாசம் (வயது 28). இவர் திருவானைக்காவல் அழகிரிபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து இறங்கிய போது இரண்டு மர்ம நபர்கள் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர். இதுகுறித்து அவர் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் போலீசார் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com