திருச்சியில் குடிநீர் தொட்டி உடைப்பு

திருச்சி மலைக்கோட்டை அருகே மாநகராட்சியின் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டது குடிநீர் தொட்டியை உடைத்ததாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
திருச்சியில் குடிநீர் தொட்டி உடைப்பு
Published on

திருச்சி,

திருச்சி வரகனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகர தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர். இவரது வீட்டு அருகே மாநகராட்சி குடிநீர் தொட்டி உள்ளது.இந்த குடிநீர் தொட்டி தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சரவணனும், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேர்ந்து உடைத்ததாக கூறப்படுகிறது . இது குறித்து திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் ரவி காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வரகனேரியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சரவணன், மலைக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.திருச்சி மாநகராட்சி குடிநீர் தொட்டியை திமுக பிரமுகர் உடைத்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com