துணிக்கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு

ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
துணிக்கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு
Published on

கோவை,

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது41). இவர் புது சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 25 -ந் தேதி இரவு பாலகிருஷ்ணன் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்பதால் அவர் கடையை திறக்க வில்லை. அன்று இரவு அவரது கடையின் மேலே உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த பேண்ட், சட்டை உள்ளிட்ட ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com