search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guard"

    • 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர்.
    • வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    திருவள்ளூர்:

    ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர்.

    அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த 188 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு ஆயுதப்படை துணைப் போலீஸ் சூப்பிரண்டு குமரன், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார், ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

    • சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் முனியப்பன் கோவில் எதிரில் உள்ள காவல் தெய்வம் சிலை மற்றும் நாய் சிலைகள் உடைக்கப்பட்டன.மேலும் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் கத்தி, பைப், ராடுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றி வருகிறார்கள்.இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திலும் அந்த பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில், சுந்தர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
    • சுந்தர் கம்பெனியில் உள்ள மேற்கூறையில் உள்ள கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொம்மி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி (31) என்ற பெண்ணுடன் திருமணமாகி, கிரிதர் (10) என்ற மகன் உள்ளான்.

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில், சுந்தர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் சுந்தர் வேலைக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில், மாற்று காவலாளி அந்தோணிசாமி வந்து பார்த்தபோது, சுந்தர் கம்பெனியில் உள்ள மேற்கூறையில் உள்ள கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தோணசாமி, இதுகுறித்து உடனடியாக கம்பெனி ஊழியர்களுக்கும், அன்னதானப்பட்டி போலீ சாருக்கும் தகவல் தெரி வித்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீ சார், சுந்தரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், சுந்தரின் மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் ரவீந்திரநாத் (57). இவர் வட்டார கல்வி அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். அதன் பின்னர் உடல்நிலை பாதிப்பால் ெதாடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து ரவீந்திர நாத்தின் மனைவி விமலா கொடுத்த புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • காவலாளியை டிரைவர் தாக்கினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் டி.டி.மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக இருப்பவர் ஜோசப் (வயது 68). இவர் பணியில் இருந்த போது ஆரப்பாளையம் புட்டு தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். அவரிடம் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தும்படி ஜோசப் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இது குறித்து கரிமேடு போலீசில் ஜோசப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    மதுரை நடராஜ் நகர் ஜான்சன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் சோபிதா அபிதா (வயது 22). இவர் மணப்பெண் அலங்காரம் செய்து வருகிறார். இதனால் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். ஆண் நண்பர்களுடனும் அடிக்கடி பேசியுள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோபிதா அபிதாவையும், சகோதரி மற்றும் தாயையும் ஆபாசமாக பேசியள்ளார். அதனை சோபிதா அபிதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் சோபி ஆபிதாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கரிமேடு போலீசில் சோபிதாஅபிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

    • வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (28). சம்பவத்தன்று இரவு ஆசனூர் வனசரகத்திற்கு உட்பட்ட மாவல்லரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் கால் தவறி கீழே பாறையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த மற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ஆனந்த் சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசியகாவலர்தியாகதினம் அனுசரிக்கப்பட்டது.
    • இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசியகாவலர்தியாகதினம் அனுசரிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், இந்தியாவில் 1959-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இந்திய-சீனா எல்லையான லடாக்கில் நடந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் 10 பேர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். அதனால் அக்டோபர் 21-ந்தேதி தேசியகாவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    காவலர்களின் பணி, செயல்பாடு, தினசரி கடமைகள், வழக்குப்பதிவுசெய்யும்முறை, விசாரணை, புலனாய்வு, குற்றசெயல்பாடுகளை கண்டறியும் தன்மை, போதைதடுப்பு, சட்ட விதிகளை பின்பற்றும்வழிமுறைகள் பற்றி விளக்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வாண்டையார், (பயிற்சி) சக்தி கணேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், ஸ்டாலின் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் கலந்துகொண்டனர்.

    எழுத்தர் நாகராஜன் நன்றி கூறினார். முன்னதாக வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பணியின் போது கடந்தஆண்டு இறந்த போலீஸ்காரர் கச்சைகட்டி மகேந்திரன் படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • மதுரை அருகே தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காவலாளி மாயமானார்.
    • கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மோதிலால் மெயின் ரோடு, யோகானந்த சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜகிரி (வயது 55). இவர் வக்கீல் புதுத்தெருவில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி கருப்பு கலர் பேண்ட், வைலட் கலர் சட்டை அணிந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மனைவி மகாலட்சுமி (46) கொடுத்த புகாரின் பேரின் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-ம் நிலை காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov.in

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 47 வயதுக்கு மிகாமல் உள்ள முன்னாள் ராணுவத்தினர் ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் பணியில் உள்ள ராணுவத்தினர் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov. என்ற இணையதள முகவரியில் 7.7.2022 முதல் 15.8.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சில் பல்லடத்தில் ஏறினர்.
    • பலத்த காயம் அடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில்:

    பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 54) . இவர் திருப்பூரில் உள்ள ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரும் இவரது மனைவி பாரதி (45) ஆகியோர் நேற்று இரவு திருமணஞ்சேரி கோவிலுக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சில் பல்லடத்தில் ஏறினர்.

    பாரதி பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்தார். வேல்முருகன் பஸ்சின் பின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அரசு பஸ் நேற்று இரவு 11.40 மணி அளவில் வெள்ளகோவில் அருகே வெள்ளமடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, வேல்முருகன் பஸ்சில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் வேல்முருகன் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலத்தில் ஓட்டல் காவலாளி திடீரென மயங்கி விழுந்து பலியானார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது50). இவர் நெய்காரப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அவர் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. #DalaiLama
    மைன்புரி :

    திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இங்குள்ள மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமா மேடையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்போது ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து கீழே அழைத்துவந்தனர். அப்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நபர் பாதுகாவலர் தேவேந்திரா என தெரியவந்தது. உடனே அவர் வெளியேற்றப்பட்டதுடன், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #DalaiLama
    ×