காவலாளி மாயம்

மதுரை அருகே தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காவலாளி மாயமானார். கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜகிரி
ராஜகிரி
Published on

மதுரை

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மோதிலால் மெயின் ரோடு, யோகானந்த சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜகிரி (வயது 55). இவர் வக்கீல் புதுத்தெருவில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 13-ந் தேதி கருப்பு கலர் பேண்ட், வைலட் கலர் சட்டை அணிந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மனைவி மகாலட்சுமி (46) கொடுத்த புகாரின் பேரின் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com