search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக் டாக்"

    • அலுவலக செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த இங்கிலாந்து தடை விதித்தது.
    • பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

    சிட்னி:

    அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கூறுகையில், டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • பாதுகாப்பு கருதி இங்கிலாந்து அரசு நடவடிக்கையினை எடுத்து உள்ளது.

    அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையினை எடுத்து உள்ளது. இங்கிலாந்து அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்து உள்ளது.

    ஆனால் தங்கள் சொந்த போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை இல்லை என்றும் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
    • காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் டிக்-டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

    வாஷிங்டன்:

    இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனாவை சேர்ந்த பிரபல டிக்-டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசின் மின்னணு சாதனங்களிலும் டிக்-டாக் செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.

    அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் இந்த செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை முழுமையாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மசோதாவுக்கு அமெரிக்கா பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் டிக்-டாக் செயலியை தடை செய்வதற்கான முழு அதிகாரம் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்-டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
    • கனடா அரசால் வழங்கப்பட்டள்ள மின்னணு சாதனங்களில் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    ஓட்டாவா:

    கனடா நாட்டில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கபட்டு உள்ளது. இது தொடர்பாக கருவூல வாரிய தலைவர் மோனாபோர்டியர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னனு சாதனங்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து கனடா நாட்டிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று (28-ந்தேதி ) முதல் அமலுக்கு வந்துள்ளது. கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்-டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. கனடா அரசால் வழங்கப்பட்டள்ள மின்னணு சாதனங்களில் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தினால் அந்த செயலி அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
    • பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அவர்கள் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகளவில் பிரபலமான பப்ஜி மற்றும் டிக்டாக் ஆகிய 2 செயலிகளின் பயன்பாட்டுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக கூறிய தலிபான்கள் இன்னும் 90 நாட்களுக்குள் இரு செயலிகளும் தடை செய்யப்படும் என தெரிவித்தனர்.

    இந்த இரண்டு பிரபலமான செயலிகளுக்கு ஒரு நாடு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.
    • அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஜி பேட்டையை சேர்ந்தவர் அக்‌ஷய் (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காஜி பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனும் புதிய ஆப்பிள் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காஜி பேட்டையில் இருந்து பாலாஷா சென்ற பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. தண்டவாளம் அருகே அக்‌ஷய் நடந்து வரும்போது பின்புறம் ரெயில் வருவது போல் செல்போனில் படம் பிடித்தனர். தண்டவாளத்தின் அருகில் சென்ற அக்‌ஷய் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.







    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.

    எனவே அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×