தாஜ்மஹால் முன்பு நடனம் ஆடிய 'டிக்-டாக்' பிரபலம்

‘இளவரசரை போல் உணர்ந்தேன்’ என்ற தலைப்பில் ராபின்சன் பகிர்ந்துள்ள வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தாஜ்மஹால் முன்பு நடனம் ஆடிய 'டிக்-டாக்' பிரபலம்
Published on: 

சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் உலக அளவில் பிரபலமானவர்களில் ஜெர்மனியை சேர்ந்த நோயல் ராபின்சனும் ஒருவர் ஆவார். சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ராபின்சன் மும்பையில் பரபரப்பான பகுதியில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவருடன் நடனம் ஆடிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் அவர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முன்பு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ராபின்சன் மெருன் நிற குர்தா அணிந்து இந்தி பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

'இளவரசரை போல் உணர்ந்தேன்' என்ற தலைப்பில் ராபின்சன் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com