என் மலர்tooltip icon

    வழிபாடு

    • மயூரகிரிச் சித்தரின் ஜீவசமாதியாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
    • அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    வெற்றி வேலாயுத சுவாமி கோவிலின் கீழ் தென் கிழக்குப்பக்கம் பாம்பு புற்றுக்குத் தனிக்கோவில் அமைந்துள்ளது. பல புற்றுக்கண்களை உள்ளடக்கிய அப்புற்றில் தெய்வீக நாகம் குடிகொண்டுள்ளது. உத்திராயண காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தில் அப்புற்று வளர்வதும், தட்சிணாயன காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தில் அப்புற்று தேய்வதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் அதிசயம் ஆகும்.

    அப்புற்றை சுப்பராயர் என்று அழைக்கின்றனர். அப்பாம்பு புற்று மயில் போலக்காட்சி அளிக்கிறது. அப்புற்றின் மேற்புறம் இரண்டு நாகச்சிற்பங்கள் உள்ளன. வெளியில் நாகர் சிற்பமும், வேலும் உள்ளன. இது மயூரகிரிச் சித்தரின் ஜீவசமாதியாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கதித்தமலையானை வழிபடும் முன்பு சுப்பராயர் சன்னதியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். நாகதோஷம், ராகு-கேது தோஷம் ஆகியன நீங்க சிறப்பு வழிபாடும் செய்கின்றார்கள்.

    • விசேஷ நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    குறிப்பாக விசேஷ நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் முன்புள்ள கொடிமரம், ராஜகோபுரம் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து செல்வர்.

    இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் எடுக்கவும் தடைவிதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்ச் 10-ந் தேதி(நாளை) முதல் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்பட அனைத்து சுவாமி சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    எனவே பக்தர்கள் அனைவரும் கோவில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் நுழைவதற்கு முன்பு தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கோவிலில் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பயணித்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் லிப்ட்டில் பயணிக்க கோவில் நிர்வாகம் நேற்றுமுதல் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி லிப்ட்டில் பயணிக்க பக்தர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம்.
    • திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-25 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி நள்ளிரவு 11.58 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : விசாகம் மாலை 4.44 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவான்மியூர், பெசன்ட்நகர், திருமயிலை, திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

    இன்று தேய்பிறை சஷ்டி விரதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

    கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-பரிசு

    கடகம்-இன்பம்

    சிம்மம்-உறுதி

    கன்னி-பாராட்டு

    துலாம்- பரிவு

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- உண்மை

    மகரம்-வெற்றி

    கும்பம்-புகழ்

    மீனம்-பணிவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவில் தடை உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.

    ரிஷபம்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவிரயம் உண்டு.

    மிதுனம்

    எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் அலைபேசி மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் ஒன்று இனிதே முடியும்.

    கடகம்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும்.

    சிம்மம்

    யோகமான நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர்.

    கன்னி

    செல்வ நிலை உயரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். நேற்று தடைபட்ட காரியம் இன்று முடிவடையும். உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்களின் கூட்டு முயற்சி வெற்றியடைய வழிகாட்டுவர். கல்யாண வாய்ப்பு கைகூடும். வருமானம் உயரும்.

    தனுசு

    பம்பரமாக சுழன்று பணியாற்றும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

    மகரம்

    வாகன பராமரிப்பில் கவனம் செலுத்தும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

    கும்பம்

    வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி எடுக்கும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் கைகூடும். வரவு திருப்தி தரும்.

    மீனம்

    சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்பே செலவுகள் காத்திருக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.

    • ஞாயிறு விடுமுறை நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிறு விடுமுறை நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    பொதுவாக விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் விழா நாட்களிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்களிலும் வந்து கடல் மற்றும் நாழிக் கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் ஞாயிறு விடுமுறை தினமான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ரிஷபம் வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் வாரம்.
    • கடகம் கடமையில் கவனமாக செயல்பட வேண்டிய வாரம்.

    மேஷம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. கற்பனைகள், கனவுகள் நனவாகும். பணவரவு ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும்.

    9.3.2026 அன்று காலை 9.30 முதல் 11.3.2026 அன்று இரவு 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருங்கிய நண்பர்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அதனால், தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாட்டை தவிர்க்கலாம். அக்கம் பக்கத்தினரின் தீய பார்வையால் ஆரோக்கியம் குறையும். முருகன் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

    ரிஷபம்

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9,10-ம் அதிபதி சனியுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும்.

    சேமிப்புகள் உயரும். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகும். பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உதயமாகும். நண்பிகளுடன் இணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

    வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 11.3.2026 அன்று இரவு 10 மணி முதல் 14.3.2026 காலை 9.33 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும். காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.

    மிதுனம்

    வெற்றிகரமான வாரம். ராசிக்கு ஒன்பதா மிடத்தில் உள்ள கிரக சேர்க்கை சில நன்மைகளையும் சில தீமைகளையும் ஏற்படுத்தலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி கூடும். வளர்ச்சிக்கான பாதை தென்படும். முக்கிய தேவைகளுக்கு பண வரவு இருக்கும். விரும்பிய கடன் தொகை கிடைக்கும். காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

    தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமாகும். பெண்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் மகழ்ச்சி அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும். முன்னோர்களுக்கு முறையான பித்ருக் கடன் தீர்க்கும் வாய்ப்புகள் உருவாகும்.

    பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பெற்றோர்களின் மணிவிழா என வீட்டில் தொடர் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். 14.3.2026 அன்று காலை 9.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆத்ம பலம் கூடும்.

    கடகம்

    கடமையில் கவனமாக செயல்பட வேண்டிய வாரம். கடக ராசிக்கு 4,11ம் அதிபதியான சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் உச்சமடைகிறார். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும். காலிமனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு.

    சிலர் உயர் கல்விக்காக, வேலைகாக வெளியூர், வெளிநாடு செல்வர். பேச்சை மூலதனமாக கொண்ட விற்பனை பிரதிநிதிகள், வக்கீல்கள், ஆசிரியர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

    சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சியில் நெருக்கமான நண்பர்கள் மூலம் கடன் கிடைக்கும். எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். சொத்துக்காக பிரிந்து சென்ற உறவுகள் தேடி வந்து இணைவார்கள். விநாயகர் வழிபாட்டால் காரிய சித்தி அடைய முடியும்.

    சிம்மம்

    சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் சம சப்தம ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு வேலையில் விரும்பிய சலுகைகள் கிடைக்கும்.

    அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். சிலருக்கு தேவையில்லாத எண்ணங்கள் தூக்கமின்மை, மன சஞ்சலம் உண்டாகலாம். மனதில் இருக்கும் ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். பூர்வீகச் சொத்தை விற்று புதியசொத்துகள் வாங்கும் சிந்தனை உருவாகும்.

    சிலர் அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். எதிர்பாராத செலவுகள் தோன்றும். கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமண வயதினருக்கு காலதாமதத் திருமணம் நல்லது. தினமும் சிவபுராணம் படித்து சிவனை வழிபடவும்.

    கன்னி

    திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைய வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6ல் வக்ர கதியில் ராகுவுடன் சஞ்சரிக்கிறார். இதற்கு குருப் பார்வை இருப்பதால் இது திறமையை மெருகேற்றி கொள்ள உகந்த அமைப்பாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தாய் வழி குடும்ப விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு இன்பங்களை மலரச் செய்யும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். தினமும் மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    துலாம்

    கற்பனைகள், கனவுகள் நனவாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் சனியுடன் இணைந்து உச்சம் பெறுகிறார். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும்.

    புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். சிலர் புதிய வாகனம் வாங்க திட்டமிடுவார்கள். சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

    சிலருக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உண்டாகும். கருவுற்ற பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.

    விருச்சிகம்

    சுமாரான வாரம். ராசி அதிபதி செவ்வாய் சூரியன் ராகு மற்றும் வக்ரம் பெற்ற புதனுடன் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். தூக்கம் குறையும். பயணங்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். கண், கை கால் மூட்டு வலி போன்றவற்றிற்கு சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் உள்ளது. வரவிற்கு ஏற்ற செலவு இருக்கும்.

    குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமத்தை சந்திப்பார்கள். ஜாமீன் சார்ந்த பிரச்சினை இருக்கும். பங்குச் சந்தையில் அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். முறையான திட்டமிடுதல் இருக்காது. உடன் பிறந்தவர்களால் பூர்வீக சொத்தால் மன உளைச்சல் இருக்கும்.

    உற்றார், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு சிறு மனத் தாங்கல் உருவாகும். குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆத்ம பலம் கூடும்.

    தனுசு

    தன்னம்பிக்கையும், துணிவும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி கூடும். வளர்ச்சிக்கான பாதை தென்படும். முக்கிய தேவைகளுக்கு பண வரவு இருக்கும். விரும்பிய கடன் தொகை கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் குறையும்.

    உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும்.

    காலிமனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். நவகிரக குரு பகவானை வழிபட மேன்மையான பலன்கள் உண்டாகும்.

    மகரம்

    வாக்கில் நிதானம் தேவை. தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. பண வரவு ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.

    தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். வீடு, மனை, திருமணம், மகப்பேறு ஆகியவை மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

    நெருங்கிய நண்பர்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அதனால், தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாட்டை தவிர்க்கலாம். உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட நவகிரகங்களின் தாக்கம் குறையும்.

    கும்பம்

    விரும்பிய கடன் தொகை கிடைக்கும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. புதிய தொழில் கடன் கிடைக்கும். வருமானத்திற்கு மீறிய கடனை தவிர்த்தால் பின் நாட்களில் சிரமம் இருக்காது.சிலருக்கு ஜாமீன் பிரச்சினைகள் வரலாம். அல்லது புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.

    சிலர் அதிக வேலைப்பளு அல்லது மன உளைச்சலால் உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெறலாம். பாகப்பிரிவினையில் உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம்.

    தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. பெண்களுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். மறுமணம் வாய்ப்பு உண்டாகும். ஸ்ரீ காலபைரவரை வழிபடுவதால் மன சஞ்சலங்கள் அகலும்.

    மீனம்

    விபரீத ராஜயோகமான வாரம். ராசியில் சனி சுக்கிரன் சேர்க்கை உள்ளது. 3,8-ம் அதிபதி சுக்ரன் ராசியில் உச்சம் பெறுவதால் விபரீத ராஜ யோகத்தால் பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். பண வரவு சரளமாக இருப்பதால் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிலர் கவுரவம் பெருமைக்காக கடன் வாங்கி வீண் செலவு செய்வார்கள்.

    சிலர் வியாபார முதலீட்டிற்கு கடன் கேட்க முனைவார்கள். சிலர் ஏதாவதொரு வகையில் ரொட்டேசன் செய்து தொழிலை பெருக்குவார்கள். பங்கு வர்த்தகத்தில் நிதானிக்க முடியாத ஏற்ற இறக்கம் நிலவும். வீடு கட்டும் பணி துரிதமாகும். அதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். அரசு அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் விரும்பத்தகாத இடமாற்றமும் உண்டாகும்.

    முக்கியமான ஆவணங்கள், பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். அரசின் உதவித் தொகை கிடைப்பதில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கிய குறைபாடுகள் அதிகரிக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் இன்னல்கள் குறையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம்.
    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-24 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி இரவு 10 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : சுவாதி பிற்பகல் 2.19 மணி வரை பிறகு விசாகம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம். கல்யாண அவசரத் திருக்கோலத்துடன் திருச்சிவிகையில் பவனி. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு லட்சதீபக்காட்சி. திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் திருவீதியுலா. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

    ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-வரவு

    கடகம்-இன்பம்

    சிம்மம்-புகழ்

    கன்னி-ஊக்கம்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- பெருமை

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-போட்டி

    மீனம்-சிறப்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    ரிஷபம்

    விடியும்பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

    மிதுனம்

    முயற்சி கைகூடும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு வியப்பர்.

    கடகம்

    மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    சிம்மம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை உயரும். இடமாற்றம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் உறவு பகையாகும்.

    கன்னி

    தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    துலாம்

    பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    விருச்சிகம்

    பணவரவு திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    தனுசு

    உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்கள் உதவி செய்வர்.

    மகரம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.

    மீனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் அல்லல்கள் உருவாகும்.

    • இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 3-ந்தேதி புனிதவெள்ளி, ஏப்ரல் 5-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 3-ந்தேதி புனிதவெள்ளி, ஏப்ரல் 5-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். அதன்படி தவக்காலம் கடந்த மாதம் 18-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.

    தவகாலத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்றதும் கீழை நாடுகளின் "லூர்து நகர்"என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று இரவு சிலுவைபாதை ஊர்வலம் நடைபெற்றது. ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை கிறிஸ்தவர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.

    இதில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

    • காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் விடாயாற்று உற்சவம்.
    • தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-23 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி இரவு 8.17 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : சித்திரை நண்பகல் 12.10 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீரங்கம், திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் விடாயாற்று உற்சவம். திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னர்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கிழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-போட்டி

    சிம்மம்-நட்பு

    கன்னி-ஆதரவு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-சிறப்பு

    தனுசு- உழைப்பு

    மகரம்-தேர்ச்சி

    கும்பம்-பரிசு

    மீனம்-ஆக்கம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம்.

    ரிஷபம்

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்ற குழப்பம் அகலும்.

    மிதுனம்

    நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    கடகம்

    விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாங்கல். கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.

    கன்னி

    பாக்கிகள் வசூலாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் வளர்ச்சிக்கு உதவுவர். குடும்பப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    துலாம்

    பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    விருச்சிகம்

    யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    தனுசு

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. சகோதர ஒற்றுமை பலப்படும்.

    மகரம்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    கும்பம்

    தனவரவு திருப்தி தரும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திட்ட மிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள்.

    மீனம்

    அலைச்சல் அதிகரித்து ஆதாயம் குறையும் நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். வரவை எதிர்பார்த்து செய்த காரியம் ஒன்றில் திடீரென செலவுகள் அதிகரிக்கலாம்.

    • தஞ்சையில் அனுமனுக்கு என கட்டப்பட்ட தனிப்பெரும் கோவிலாக மூலை அனுமார் கோவில் விளங்குகிறது.
    • தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டேன் என நவகிரகங்களிடம் சத்திய பிரமாணம் பெற்றவர் மூலை அனுமார்.

    தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற சனி தோஷம் போக்கும் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மானால் கட்டப்பட்டது. தஞ்சையில் அனுமனுக்கு என கட்டப்பட்ட தனிப்பெரும் கோவிலாக மூலை அனுமார் கோவில் விளங்குகிறது.

    மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட நவகிரகங்களை தன் பலத்தால் விடுதலை ஆக்கியவர் அனுமார். இதன் பலனாக தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டேன் என நவகிரகங்களிடம் சத்திய பிரமாணம் பெற்றவர் மூலை அனுமார். இவரை வழிபடுபவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி ஆற்றலும் மேன்மையும் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றியை தரக்கூடியவர் என்பது வரலாறு.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மூலை அனுமார் கோவிலில் ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி அன்றும் மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். சனிதோஷம் நீங்க மூலை அனுமாரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

    அதன்படி இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் பரிகார அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்தார்கள்.

    ×