search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sani Peyarchi"

    • வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற உள்ளது.
    • சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பக்தர்கள் சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற உள்ளது. அதேசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பக்தர்கள் சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும், இன்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதல் திருநள்ளாறு நலன் குளத்தில் புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரி சனம் செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்த சாமி தம்பிராயன் சுவாமிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், போலீசார் செய்து வருகின்றனர்.

    • சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
    • பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு:

    திருநள்ளாறில் உலகபுகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் சனீஸ்வரர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

    சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதையொட்டி சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.

    பின்னர் கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக காரைக்கால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவிலுக்கு 25 பஸ்கள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் 15-ந்தேதி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்றார்.

    • 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.
    • திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறாா்கள்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

    இக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம்படி, இந்த ஆண்டு வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது என்றும், அன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக தேதி, நேரம் அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.
    • இன்று மாலை மாலை 6.04 மணிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.

    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

    சச்சரவின்றி சாகா நெறியில்

    இச் சகம் வாழ இன்னருள் தா தா

    நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3-ம் நாள் 17.1.2023 செவ்வாய் கிழமை இன்று மாலை 6.04 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களில் நீதிமானாக போற்றப்படும் சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில்(காலபுருஷ10ம் ராசி) அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து மற்றொரு சொந்த வீடான கும்ப ராசி (காலபுருஷ11ம் ராசி) அவிட்டம் 3ம் பாதம் சென்று ஆட்சி பலம் பெறப்போகிறார்.

    சனி பகவான் தனது 3ம் பார்வையால் காலபுருஷ முதல் ராசியான மேஷத்தில் உள்ள ராகுவையும் ஏழாம் பார்வையால் காலபுருஷ ஐந்தாம் ராசியான சிம்மத்தையும் பத்தாம் பார்வையால் காலபுருஷ அஷ்டம ஸ்தானமான விருச்சிகத்தையும் பார்வையிடு கிறார்.

    சனிப் பெயர்ச்சி அனைவருக்கும் கெடுபலன் தராது. அவரவரின் சுய ஜாதகத்தில் நடப்பில் உள்ள தசை புத்திக்கு ஏற்ற சுப, அசுப விளைவுகளே நடக்கும். எனவே பரிகார ராசியினர் சுய ஜாதகரீதியான நடப்பு திசை மற்றும் புத்தி அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் இறைவழிபாடுகளை கடைபிடிக்க நல்ல விதமான முன்னேற்றங்கள் உண்டாகும்.

    பரிகார ராசிகள்:

    கடகம் - அஷ்டமச் சனி

    சிம்மம் - கண்டகச் சனி

    விருச்சிகம் - அர்தாஷ்டமச் சனி

    மகரம் - பாதச் சனி

    கும்பம் - ஜென்மச் சனி

    மீனம் - ஏழரைச் சனி ஆரம்பம்

    கடக ராசியினர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் சென்று வழிபடவும்.பிற 5 பாரிகார ராசியினர் குச்சனூர் அல்லது திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபட வேண்டும்.

    மேஷம் - லாபச் சனி

    ரிஷபம் - தொழில் சனி

    மிதுனம் - பாக்கியச் சனி

    கன்னி - ரோக ஸ்தான சனி

    துலாம் - பஞ்சம சனி

    தனுசு - சகாய ஸ்தான சனி

    இந்த ராசியினர் சனிக்கிழமை சிவன் கோவிவில் உள்ள கால பைரவரை வழிபட நன்மைகள் இரட்டிப்பாகும்.

    அதே போல் சனிப் பெயர்ச்சி என்றவுடன் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.ஏப்ரல் 22, 2023ல் ஏற்படப் போகும் குருப்பெயர்ச்சியால் உலகிற்கு பல்வேறு சுப பலன்களும் உண்டாகும். சில மாதங்கள் ராகு குருவை கிரகணப் படுத்தினாலும் மீதமுள்ள மாதங்களில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் உண்டு.

    மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டேகால் வருடத்தில் சுமார் ஒன்பது மாத காலம் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் குருவின் உதவியுடன் எளிமையாக சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது ஆறுதலான விசயம்.

    அனைவரும் தமது கடமையையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வரை நமது செயல்பாடுகளால் பிறரை காயப்படுத்தாமல் வாழும் வரை துன்பம் யாரையும் நெருங்காது. அத்துடன் வாக்கிய பஞ்சாங்கம் சரியா? திருக்கணித பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதமும் அவசியமற்றது. அவரவரின் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை ஒத்து வருகிறதோ அதை பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது.

    நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும் போது நமக்குள் இருக்கும் உயிரே இறைவன் என்பதை உறுதியாக உணரும் போது, ஆத்மா புனிதமடையும்.

    ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. சனி பகவான் காற்று ராசியான கும்பத்தில் சஞ்சாரம் செய்வதால் பரிகாரங்கள் பாரயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும்.

    ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்

    கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

    ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி

    இந்த சனிப்பெயர்ச்சி அனைவரின் வாழ்விலும் தித்திப்பான மாற்றமும், மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிறைந்த செல்வமும், நோயற்ற வாழ்வும் நிரந்தரமாக வழங்க பிரபஞ்ச தாயின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
    • சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சமயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.

    வருகிற 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று சிலரும், மார்ச் மாதம் நடைபெறும் என சிலரும் வேறு பஞ்சாங்கம் முறைப்படி தவறான தகவல்களை பரப்பி வருவதால், பக்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள், நேற்று சனீஸ்வரர் சன்னதி முன்பு அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த பக்தர்களுக்கு குழப்பம் தீர்ந்தது.

    ×