search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirunallar Temple"

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி கம்பத்தில் ஏற்றப்படும் சிவகொடி, கோவிலின் நான்கு வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தர்பாரண் யேஸ்வரர் சன்னதி முன்பு சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றினர்.

    தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஜூன் 2-ந்தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 9-ந்தேதி காலை தேரோட்டமும், 10-ந்தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும் நடக்கிறது. 11-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
    ×