search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: நளன்குளத்தில் புனிதநீராடி சாமி தரிசனம்
    X

    பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: நளன்குளத்தில் புனிதநீராடி சாமி தரிசனம்

    • சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது.
    • இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இ்ங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதாலும், நேற்று சனிக்கிழமை என்பதாலும் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.

    அதிகாலை முதலே வந்த பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோடை வெயில் தாக்கி வருவதால் பக்தர்கள் வெயிலை சமாளிக்க, நளன்குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். கோவில் ஊழியர்கள், போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×