என் மலர்
நீங்கள் தேடியது "Rashi"
- சனிப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு
- எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.
சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க நீலகண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு நம்புகளுக்கு இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களை நீக்கக் கூடிய வழிபாட்டையே பிரதோஷம் என்கிறோம்.
ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஒரு வருடம் முழுவதும் சிவாலயத்திற்கு சென்று வழிபட்ட பலனை பெற்று விடலாம். ஒரு சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஐந்து ஆண்டுகள் சிவாலயத்தில் தரிசித்த பலனை பெற்று விடலாம் என்பார்கள். நாளை சனிக்கிழமை (15.7.23) சனி மகா பிரதோஷம் வருகிறது. திங்கள் கிழமையில் வருவது சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வருவது சனி மகா பிரதோஷம் என்றும் சிறப்பு பெறுகின்றன. இதே போன்று ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு, தனி பலன் உண்டு.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சனி மகாபிரதோஷம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இன்றைய தினம் 12 ராசிக்காரர்களும் சிவ தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.
சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சனி பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். கடன் சுமை அகலும், மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.
நெருப்பு ராசிகள்:
12 ராசிகளில் நீர் ராசிகள், நில ராசிகள், நெருப்பு ராசிகள், காற்று ராசிகள் என நான்கு விதமாக பிரித்துள்ளனர். மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நெருப்பு தத்துவத்தை தன்னுள்ளே கொண்டுள்ளன. இந்த ராசிக்காரர்கள் பிரதோஷ நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் வர நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருவண்ணாமலை செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பழங்கள் வாங்கித்தர பாவங்கள் விலகும்.
நில ராசிகள்:
பஞ்ச பூத தத்துவத்தில் நில தத்துவத்தை உணர்த்தும் ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம். இந்த ராசிக்காரர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், இந்த ஆலயத்தில் பிருத்வி லிங்கத்தை பிரதோஷ தினத்தில் வழிபட நன்மைகள் நடைபெறும். அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர தோஷங்களும் பாவங்களும் விலகும்.
காற்று ராசிகள்:
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் காற்று ராசிக்காரர்கள். காளகஸ்தியில் உள்ள திருக்காளத்தி நாதரை பிரதோஷ காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வழிபட புண்ணிய பலன்கள் கிடைக்கும். காளத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்து வணங்கினால் நோய் நொடிகள் தீரும்.
நீர் ராசிகள்:
கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூத தத்துவத்தில் நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். திருச்சி அருகே திருஆனைக்காவில் எழுந்தருளி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்தான் நீர்தலம். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பிரதோஷ காலத்தில் திருவானைக்கால் ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க வறுமை நீங்கி செல்வம் பெருகும். அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித்தர செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆகாய தலம்:
ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜரை வழிபட வேண்டும். பஞ்ச பூத தலங்களில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் 27 தீபங்களை ஏற்றி வழிபடலாம். பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினத்தில் வந்து வழிபடுவது சிறப்பு. சனி மகா பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்வது ஆயிரம் ஆண்டுகள் சிவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
- இவர்கள் காயப்படுத்தியவர்களை மன்னித்தாலும் அதனை ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள்.
- ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது, இவை உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதேசமயம் இவர்களின் சில குணங்கள் வேடிக்கையானதாகவும் இருக்கும். வாழ்க்கை மீதான அவர்களின் அணுகுமுறை எப்பொழுதும் அன்பை அடிப்படையாக கொண்டிருக்கும்.
மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும், எப்படி மதிப்பிட வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். மனிதனாக பிறந்த அனைவரிடமும் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் கலந்துதான் இருக்கும். இந்த பதிவில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்புக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். கடின உழைப்பாளியாக இருந்தாலும் திட்டமிடுவதில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் திட்டமிட்டே இவர்கள் செய்வார்கள். இவர்கள் எதையும் சொன்ன நேரத்தில் செய்து முடிக்க கூடியவர்கள். அதனால் எப்பொழுதும் பாராட்டை பெறுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் இவர்கள் இருப்பார்கள்.
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிகப்படியான உணர்ச்சிகரமான அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறார்கள், இதை நாம் மனநிலை மாற்றங்கள் என்றும் அழைக்கலாம். இவர்கள் மிகவும் தனிப்பட்ட நபராக இருப்பவர்கள், நெருக்கமானவர்களுக்கு கூட தங்கள் மனதில் இருப்பதை இவர்கள் வெளிப்படையாக கூறமாட்டார்கள். இதனால் மற்றவர்களுக்கு இவர்களிடம் நெருங்குவதோ அல்லது இவர்களை புரிந்து கொள்வதோ மிகவும் கடினமானதாக இருக்கும்.
இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதால் தான் செய்யும் அனைத்து வேலையும் நூறு சதவீதம் சரியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தான் செய்யும் அனைத்துமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர்களின் குணம் சிலசமயம் ஆச்சரியத்தையும், சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
அனைத்தையும் திட்டமிட்டு செய்யக்கூடிய இவர்கள் தன்னுடைய எதிர்காலத்தை பற்றியும், தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றியும் எப்போதும் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கினாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பார்கள்.
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களாக இருப்பார்கள். அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய இவர்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலசமயம் இவர்களின் அதீத அக்கறை தவறானதாக தெரிந்தாலும் அது இவர்களின் நல்ல குணங்களில் ஒன்றுதான். இவர்களுடன் இருக்கும்போது இவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதுகாப்பாக உணருவார்கள்
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அனைவரையும் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணவர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் இவர்களின் குணம் இவர்களை அதிக இரக்கமுள்ளவர்களாக மாற்றும். நெருக்கமானவர்களின் உணர்வுகள் மட்டுமின்றி புதிய நபர்களின் உணர்வுகளை கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலும்.
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் தனக்கானவர்கள் என்று வரும்போது அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்தையுமே இவர்கள் கொஞ்சம் தீவிரமாகவும், தனிப்பட்டரீதியாகவும் எடுத்துக்கொள்வார்கள். இதனால் இவர்களின் இதயம் எளிதில் நொறுங்கிவிடக்கூடும். மேலும் இவர்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் காயப்படுத்தியவர்களை மன்னித்தாலும் அதனை ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள்.
- மிகக்குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் உணருவீர்கள்!
- 27 நட்சத்திரங்களையும் அவர்களுக்கு உகந்த கோவில்களையும் பார்க்கலாம்.
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் சென்று தரிசித்து வருவது மிக மிக முக்கியம். மிக மிக நல்லது. நற்பலன்களை அள்ளித் தரும்.
அஸ்வினி - கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயம், கூத்தனூர். மற்றும் பிறவி மருந்தீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி.
பரணி நட்சத்திரம் - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர்,
கார்த்திகை நட்சத்திரம் - ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர், மயிலாடுதுறை.
ரோகிணி நட்சத்திரம் - ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம். மற்றும் ஸ்ரீபக்தவத்சல ஆலயம், திருக்கண்ணமங்கை, குடவாசல்.
மிருகசீரிடம் - ஸ்ரீ முருகன் ஆலயம் - எண்கண், திருவாரூர். மற்றும் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோயில்,முகூந்தனூர். திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவு.
திருவாதிரை - ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயம், அதிராம்பட்டினம். மற்றும் ஸ்ரீசோழீஸ்வரர் சேங்காலிபுரம் திருவாரூர்.
புனர்பூசம் - ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம், வாணியம்பாடி, ஸ்ரீ சட்டைநாதசுவாமி ஆலயம், சீர்காழி.
பூசம் - ஸ்ரீ அட்சய புரீஸ்வரர் ஆலயம், பட்டுக்கோட்டை அருகில் விளங்குளம். மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை. மேலும் கும்பேஸ்வரர் ஆலயம் கும்பகோணம்.
ஆயில்யம் - ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருத்தேவன்குடி, கும்பகோணம் அருகில். ஸ்ரீசாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம் கும்பகோணம்.
மகம் -ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் விராலிப்பட்டி விலக்கு, திண்டுக்கல். மற்றும் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, சீர்காழி.
பூரம் - ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம், திருவரங்குளம், புதுக்கோட்டை. மற்றும் ஸ்ரீ தக்ஷின புரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம்.
உத்திரம் - ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர், லால்குடி, திருச்சி. மற்றும் ஸ்ரீகரரவீரநாதர் கோயில், திருவாரூர். திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவு.
அஸ்தம் - ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் ஆலயம், கோமல், குத்தாலம், மயிலாடுதுறை.
சித்திரை - ஸ்ரீ சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம், குருவித்துறை, மதுரை. மற்றும் ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு.
சுவாதி - ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம், தண்டுரை, பூந்தமல்லி. ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம், திருவிடைமருதூர்.
விசாகம் - ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோவில், திருமலை, செங்கோட்டை, மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் ஆலயம், கபிஸ்தலம்.
அனுஷம் - ஸ்ரீமகாலட்சுமி புரீஸ்வரர் ஆலயம், திருநின்றியூர், மயிலாடுதுறை. மற்றும் திருநரையூர் நம்பி கோயில், (நாச்சியார்கோவில்) கும்பகோணம்.
கேட்டை - ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், தஞ்சாவூர். மற்றும் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஆலயம், வழுவூர், நாகப்பட்டினம்.
மூலம் - ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் மப்பேடு, பூந்தமல்லி, மற்றும் ஸ்ரீமயூரநாதர் மயிலாடுதுறை.
பூராடம் - ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில், திருவையாறு. திருவையாறில் இருந்து 4 கி.மீ. தொலைவு.
மற்றும் ஸ்ரீ பரமநாத சுவாமி கோவில், கடுவெளி, திருவாரூர். (கடுவெளி சித்தர் ஜீவ சமாதி ஆலயம்)
உத்திராடம் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஒக்கூர். சிவகங்கை. மற்றும் எழுத்தறி நாதேஸ்வரர் திருஇன்னம்பூர், கும்பகோணம்.
திருவோணம் - ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம், திருப்பாற்கடல் வேலூர், மற்றும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயில் திருமுல்லைவாயல், சென்னை.
அவிட்டம் - ஸ்ரீ பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆலயம், கும்பகோணம். தாராசுரம் அருகில் கொற்கை திருத்தலம். மற்றும் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்பூந்துருத்தி, திருவையாறு.
சதயம் - ஸ்ரீஅக்னீபுரீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர், நன்னிலம் அருகில். திருவாரூர்.
பூரட்டாதி - ஸ்ரீ திருவானேஸ்வரர் ஆலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு. மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருக்குவளை.
உத்திரட்டாதி - ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆலயம், தீயத்தூர், ஆவுடையார் கோவில், மற்றும் ஸ்ரீமதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்.
ரேவதி - ஸ்ரீ கயிலாசநாதர் கோவில், காருகுடி, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி. மற்றும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு, மயிலாடுதுறை.
- இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள்.
- இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள்.
இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள். அதாவது இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள். உங்களுடைய பூஜையறையில் தவறாமல் பயன்படுத்துங்கள். அலுவலகத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் வியாபார தலங்களிலும் இந்த மலர்களை வைத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நட்சத்திரத்திற்கான மலர்களை தெய்வ வழிபாட்டில் அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த மலர்களைப் பயன்படுத்துவதும், உங்கள் வீட்டு பூஜை அறை, அலுவலகம், தொழிலகம், வியாபார ஸ்தலங்கள் முதலான இடங்களில் பயன்படுத்துவதும் நல்ல பலன்களைத் தரும்.
மன அமைதியை உண்டாக்கும். நல்ல சிந்தனையைத் தரும். இவற்றைத் தவறாமல் பயன்படுத்துங்கள். மிகக்குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் உணருவீர்கள்!
அஸ்வினி - சாமந்தி
பரணி - முல்லை
கார்த்திகை - செவ்வரளி
ரோகிணி - பாரிஜாதம், பவளமல்லி,
மிருகசீரிடம் - ஜாதி மல்லி
திருவாதிரை - வில்வப் பூ, வில்வம்
புனர்பூசம் - மரிக்கொழுந்து
பூசம் - பன்னீர் மலர்
ஆயில்யம் - செவ்வரளி
மகம் - மல்லிகை
பூரம் - தாமரை
உத்திரம் - கதம்பம்
அஸ்தம் - வெண்தாமரை
சித்திரை - மந்தாரை
சுவாதி - மஞ்சள் அரளி
விசாகம் - இருவாட்சி
அனுஷம் - செம்முல்லை (செந்நிற மலர்கள்)
கேட்டை - பன்னீர் ரோஜா
மூலம் - வெண்சங்கு மலர்
பூராடம் - விருட்சி (இட்லிப்பூ)
உத்திராடம் - சம்பங்கி
திருவோணம் - ரோஜா
அவிட்டம் - செண்பகம்
சதயம் - நீலோற்பவம்
பூரட்டாதி - வெள்ளரளி
உத்திரட்டாதி - நந்தியாவட்டம்
ரேவதி - செம்பருத்தி
- ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
- 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர் கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
மேஷம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
ரிஷபம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மிதுனம் :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கடகம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
சிம்மம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கன்னி :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
துலாம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
விருச்சிகம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
தனுசு :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மகரம் :
தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கும்பம் :
தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மீனம் :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
- நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
- திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடப்படுகிறது.
வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.
பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள்.
துவிதியையில் பிறந்தவர்கள், உண்மையை பேசுபவர்கள். பொய் பேசுவது அரிது.
திருதியையில் பிறந்தவர்கள், தான் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பவர்கள்.
சதுர்த்தியில் பிறந்தவர்கள், மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்கள்.
பஞ்சமியில் பிறந்தவர்கள், பொன் ஆசை உடையவர்கள்.
சஷ்டியில் பிறந்தவர்கள், செல்வந்தராக விருப்பப்படுவார்கள்.
சப்தமியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் மேல் இரக்க குணம் உடையவர்கள்.
அஷ்டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளின் மேல் மிகவும் அன்பு உடையவர்கள்.
நவமியில் பிறந்தவர்கள், அதிக புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள்.
தசமியில் பிறந்தவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக விளங்குவார்கள்.
ஏகாதசியில் பிறந்தவர்கள், புதுமையான தொழில்களில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.
திரயோதசியில் பிறந்தவர்கள், உறவினர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.
பௌர்ணமியில் பிறந்தவர்கள், தெளிவான சிந்தனை உடையவர்கள்.
அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருப்பர்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுப்படையாக ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்ட விஷயங்கள்.
- ஒருவரின் ஜாதகம், பிறந்த தேதி, நேரத்தை பொறுத்து இவை சற்று மாறுபடும்.
எல்லோருமே பொய் சொல்கிறோம்.
எவ்வளவு பொய் சொல்கிறோம்?
எதற்காகப் பொய் சொல்கிறோம்?
என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது.
அரிச்சந்திரனுக்குப் பிறகு பொய்சொல்லாதவர்களை விரல்விட்டுத்தான் எண்ணவேண்டியதாக இருக்கிறது. ஜாதகப்படி எந்த ராசிக்காரர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: இவர்கள் பல நேரங்களில் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் எரிமலை குழியில் அமர்ந்திருப்பது போன்று எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் அளவிற்கான கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் கோபத்தை மறைப்பதற்காகவே அமைதியாக இருக்கிறேன் என்று பொய் கூறுவார்கள்.
ரிஷபம்: இவர்களை காளை அல்லது கருப்பு குதிரை என்று கூறலாம். இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். தங்களுக்கு பிடித்த நபர், பொருள், அல்லது ஏதேனும் ஒரு விஷயம் மற்றவர்களிடம் இருந்தால் அதனைக் கண்டு பொறாமைப்படுவார்கள். இவர்கள் பொறாமை படுவது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக அசடு வழிந்து பொய் கூறுவார்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எளிதில் பழகக் கூடியவர்கள். சில சமயங்களில் அமைதியாக இருப்பது போலவும், வெட்கப் படுவது போலவும் பொய் கூறுவார்கள்.
கடகம்: இவர்கள் அதிகம் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். எனவே மற்றவர்களினால் இவர்கள் மனது எளிதில் காயமடையும். எனினும் அந்த வழியை மறைத்துக் கொண்டு நன்றாக இருப்பதாக சொல்லி பொய் கூறுவார்கள்.
சிம்மம்: இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் தன்னைப் பார்க்கும் பொழுது அது தெரியாதது போல் காட்டிக் கொள்வார்கள். இவர்கள் வேதனைப்படும் நேரங்களில் அதனை வெளிக்காட்டாமல் பொய் கூறுவார்கள்.
கன்னி: இவர்கள் தங்களது வாழ்வில் எல்லாவற்றையும் திட்டமிட்டு தான் செய்வார்கள். பரிபூரணமானவர்களாக திகழ்வார்கள். மற்றவர்களிடம் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல் காட்டிக் கொள்ளும் இவர்கள், ஏதேனும் ஒரு விஷயம் தங்களுக்கு தெரியவில்லை என்றால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொய் கூறுவார்கள்.
துலாம்: இவர்கள் பல நேரங்களில் செய்ய முடியாத விஷயம் என்று தெரிந்த போதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் யாரேனும் வயதானவர்கள் இவர்களிடம் சிக்கினால் இன்னும் அதிகமான பொய்களை கூறுவார்கள்.
விருச்சிகம்: இவர்கள் மிகவும் மர்மமானவர்கள். எளிதில் மற்றவர்களுடன் பழகக்கூடிய இவர்கள் தங்களின் வாழ்க்கை நிலையை வெளியில் கூறாமல் பொய்யாக நடிப்பார்கள். பல நேரங்களில் தனக்கு என்ன தேவையோ அதற்காக மட்டும் பொய்யாக நடிப்பார்கள்.
தனுசு: இவர்கள் யாருடைய உணர்வு, மரியாதை இவை எதையும் பொருட்படுத்தாமல் பொய் கூறுவார்கள். தங்களை மிகவும் ஆளுமை உடையவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இவர்கள் எப்பொழுதும் பல காரியங்களுக்காக மற்றவர்களுடன் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் மற்றவர்களால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பொய் கூறுவார்கள்.
மகரம்: மகர ராசியினர் மிகவும் வலிமையானவர்கள். எனினும் இவர்களால் எல்லா காரியங்களையும் தனியாக செய்து முடிக்க முடியாது. இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் எந்த உதவியும் கேட்க மாட்டேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய பெருமைப்படுகிறேன் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் மற்றவர்களிடம் உதவி கேட்காமல் தவித்துக் கொண்டு பொய் கூறுவார்கள்.
கும்பம்: இவர்களின் எண்ணம் மற்றும் சுவை சற்று வித்தியாசமாகவே இருக்கும். பலருக்கும் புதுமையான விஷயங்களை கையாளுவதில் சற்று பயம் இருக்கும். ஆனால் இவர்களோ தனக்கு எந்த பயமும் இல்லை என்று அதனை செய்யத் தொடங்கி,தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த விஷயத்தை செய்து முடித்தேன் என்று பொய் கூறுவார்கள்.
மீனம்: மகர ராசியினர் போல் இவர்களும் உதவி கேட்க தயக்கம் காட்டுவார்கள். இருப்பினும் தன்னிடம் அனைத்து விஷயங்கள் இருந்தும் மற்றவர்களிடம் வெறும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதாக சொல்லி, தங்கள் காரியத்தை முடித்துக் கொள்வார்கள். இவ்வாறு நேரடியாக உதவி என கேட்காமல் பொய் கூறுவார்கள்.
-மேலே சொல்லப்பட்டிருக்கும் அத்தனை பலன்களும் அனைவருக்கும் பொதுப்படையாக ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்ட விஷயங்கள். ஒவ்வொரு தனி நபருடைய ஜாதகம், பிறந்த தேதி, நேரத்தை பொறுத்து இவை சற்று மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா? காதல் திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
- நவகிரக அமைப்பை வைத்து ஜாதகருக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
சூரியன்
சூரியன் மனக்கோட்டை, கற்பனை, கனவுகளுக்கு காரக கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவகத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றால் காதல் பற்றிய பல விதமான கற்பனைகளும், கனவுகளும் இருக்கும். இதில் அந்தஸ்து மற்றும் கவுரவம் பற்றிய மிகைப்படுத்ததலான எதிர்ப்பார்ப்பு இருக்கும். தன் கனவிற்கும், கற்பனைக்கும் அந்தஸ்திற்கும் சமமான நபர் கிடைத்தால் மட்டுமே காதலிக்க துவங்குவார்கள்.
சந்திரன்
சந்திரன் உடலையும், மனதையும் குறிக்கும் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் ஜந்தாம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றால் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நபரின் அன்பு கிடைத்தால் அவர்கள் மேல் காதல் வந்து விடும். செவ்வாய் செவ்வாய் வேகத்திற்கும், வீரத்திற்கும், தைரியத்திற்கும் காரககிரகம். ஐந்தாம் பாவகத்துடன்
செவ்வாய்
சம்பந்தம் இருந்தால் காதலிக்கும் தைரியம் வரும். செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் நல்ல தரமான நபருடன் காதல் ஏற்படுகிறது. அசுப கிரகம் சம்பந்தம் பெற்றால் தரமில்லாத, தகுதி குறைந்த நபருடன் காதல் உருவாகிறது.
புதன்
காதலுக்கான காரக கிரகம் புதன். ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கும், நுண்ணறிவிற்கும் காரக கிரகமான புதன் காதலிக்கும் போது மட்டும் மதியை இழந்து நிற்கும். எத்தனை வயதானாலும் புதன் தசை, புத்தி அந்தர காலங்களில் காதல் அவஸ்தையால் மன நோயாளியாகிறார்கள். குரு குரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் காரக கிரகம்.
குரு
ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு மரியாதைக்குரிய நபர்கள் மற்றும் கவுரவமான நபர்கள் மீது காதல் வரும். இவர்கள் கவுரவத்திற்கு பயந்து பெற்றோர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதில்லை. வாழ்நாள் முழுவதும் தங்கள் காதலை ஆழ்மனதில் அசை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இது தான் காதலுக்கு மரியாதை.
சுக்ரன் சுக்ரன் அழகிற்கும், ஆடம்பரத்திற்கும், காமத்திற்கும் காரக கிரகம். எந்த வயதினராக இருந்தாலும் சுக்ரன் தசை, புத்தி காலங்களில் அழகு, ஆடம்பரம்,காமம் போன்றவற்றினால் காதல் வருகிறது. சுக்ரனால் ஏற்படும் காதலில் பெரும்பாலும் ஆழமான அன்பு இருக்காது. பலர் போக்சோவில் தண்டனை அனுபவிப்பது, பல பெண்களிடம் தவறாக பழகுபவர்களுக்கு சுக்ரன், ராகு சம்பந்தம் இருக்கும். இவர்களின் காதல் திருமணத்தில் முடிவதில்லை, திருமணம் நடந்தாலும் தோல்வியைத் தழுவுகிறார்கள்.
சனி
சனி துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரக கிரகம். ஐந்தாம் பாவகத்துடன் சனி சம்பந்தம் பெற்றால் தங்கள் துன்பம், கவலைகளில் ஆர்வம் செலுத்துபவர்கள் மீது காதல் கொள்கிறார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் வேலை பார்க்கும் இடத்தில் காதல் வருகிறது. இளம் பருவத்தில் வயது வித்தியாசமில்லாமல் ஏற்படும் காதல் நிறைவேறாது. காதலர்கள் பலர் நம்பிக்கை துரோகத்தால் உயிரை துறக்கிறார்கள்.
ராகு
ராகு வேற்று மொழி பேசுதல் மற்றும் திருட்டுத்தனத்தைக் குறிக்கும் கிரகம். தவறான நபர்களிடம் காதல் கொள்ளுதல், ஏற்கனவே திருமணமானவர்களை காதலிப்பதையும் கூறும் கிரகம். ராகு. பலருக்கு திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மனச்சுமையை பகிர்ந்து கொள்ளும் தகாத உறவைத் தருகிறது. முகம் சுளிக்க வைக்கும் காதல் உறவை ஏற்படுத்துகிறது.
கேது
கேது ஞானத்திற்கும் பக்திக்கும், வேற்று மதத்திற்கும் காரக கிரகம் என்பதால் மதம் மாறிய காதலுக்கு வழி வகுக்கிறது. இவர்கள் காதலால் சட்ட நெருக்கடியை சந்திப்பவர்கள்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
- எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடக்கும் என்று பார்க்கலாம்.
குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். 2023 குருப்பெயர்ச்சிக்கு பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும் என்பதை பார்க்கலாம்.
சரியான வரன் கிடைக்காமல் , வரன் கிடைத்தாலும் பல காரணங்களால் திருமணம் தடைபட்டு விரக்தியில் இருக்கும் இந்த 7 ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு கட்டாயம் சிறப்பாக திருமணம் நடைபெற போகிறது.
மேஷ ராசி – ஜென்ம குரு
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்மத்தில் ராகுவும் ஏழாவது இடத்தில் கேதுவும் இருந்து திருமணத்தடை கொடுத்து வந்த நிலையில் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் ஏழாவது வீட்டை பார்ப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பிறகு திருமண தடை நீங்கும். ராகு கேதுவால் ஏற்பட்ட திருமண தடையை குரு பகவான் விலக்கி கொடுத்து வெற்றிகரமான திருமண வாழ்க்கையை அமைத்து தருவார்.
மிதுன ராசி – லாப குரு
அஷ்டமா சனி காலம் முடிந்து வெற்றியின் தொடக்கத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, குருப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையப் போகிறது. குரு பகவான் 11ஆம் வீட்டுக்கு மாறப் போகிறார். இதனால் வரையில் வாழ்க்கையிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து கோடீஸ்வர யோகத்தோடு திருமண வாழ்க்கை அமையும்.
சிம்ம ராசி – பாக்ய குரு
சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் குருப்பெயர்ச்சி இதுவாக இருக்கப்போகிறது. பாக்கியஸ்தானத்தில் பயணம் செய்யப் போகும் குரு பகவான் , அற்புதமான பண வரவோடு இனிமையான வாழ்க்கை துணையை உங்களுக்கு கண் முன்னே நிறுத்துவார். சனி பகவான் பார்வை சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் விழுவதால் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படும் எனினும் குரு பகவான் ஆசியோடு திருமணம் நடைபெறும்.
துலாம் ராசி – களத்திர குரு
குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இதனால் வரை ஜென்மத்தில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் இருந்து திருமண தடை ஏற்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குரு பார்வை கிடைப்பதால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும்.
தனுசு ராசி – பூர்வ புண்ய குரு
ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டது , ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு மாறப்போகிறார் குரு பகவான். குருவின் பார்வை ஒன்பதாம் இடத்திற்கு கிடைக்கப் போவதால், காதல் திருமணம் கைகூடவும், நீங்கள் விரும்பிய பெண்ணை மனம் முடிக்கவும் வாய்ப்புகள் வந்து சேரும். தனுசு ராசிக்காரர்களுக்கு அமோகமான திருமண வாய்ப்பு ஏற்படும்.
கும்ப ராசி – தைரிய குரு
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம், எனினும் ஏழாம் வீட்டில் குரு பார்வை விழுவதால், பல பிரச்சனைகள் வந்தாலும் திருமணம் தடை பெறாது. திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அமைப்பு கும்ப ராசிக்காரர்களுக்கு உள்ளது.
மீன ராசி - குடும்ப குரு
2023 குருப்பெயர்ச்சியின் போது குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு செல்கின்றார். ராசிநாதனாகிய குரு பகவான் ஆசி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் ஏழரை சனியை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை. குரு பகவான் குடும்ப ஸ்தானத்துக்கு செல்வதால், இது வரையில் இருந்த திருமண தடை நீங்கும். கட்டாயம் மீன ராசிக்காரர்களுக்கு 2023 குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் திருமணம் நடந்தே தீரும்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
குருப்பெயர்ச்சி பலன்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்...https://www.maalaimalar.com/rasipalan
- குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
- நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.
சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி (22.4.2023) சனிக்கிழமையன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். அந்த இடங்களின் மூலம் நமக்கு அதிகப்பலன்கள் கிடைக்கும். மேஷத்திற்கு குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெற்று புதனுடன் இணைந்து புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். சுக்ரன் மற்றும் சனி தங்களது சொந்த வீடுகளில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள். இந்த குருப்பெயர்ச்சி நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாகவே அமையும்.
குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு.
குரு தன ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம். மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். பதவி வாய்ப்பு கைகூடும். செல்வாக்கு உயரும்.
மேஷத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். வக்ர காலத்தில் சிலருக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். இதற்கிடையில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் 8.10.2023-ல் ஏற்படுகின்றது.
ஜென்ம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக கன்னிக்கும், அர்த்தாஷ்டம குருவாக மகரத்திற்கும், விரய குருவாக ரிஷபத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம்பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றில் உள்ள தடைகள் அகன்று தக்க விதத்தில் பலன் கிடைக்கும்.
இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு பகவான் சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற வீட்டிற்குள் வருகின்றார். ராகுவோடு குரு இணைவதால் குருவிற்குரிய முழுமையான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னரே கிடைக்கும்.
நோய் தொற்று ஆபத்து
இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக நோய்த் தொற்றுகள் கொஞ்சம் தீவிரமாகப் பரவும் சூழல் உருவாகலாம். சனியின் பார்வையும் ராகு மீது பதிவதால் சனி மீண்டும் 24.8.2023-ல் மகரத்திற்கு வக்ரமாகி வரும் வரை மக்கள் அனைவரும் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டும்.
சூரியனோடு ராகு இணைந்திருப்பதால் உஷ்ணாதிக்க நோய், காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு. முகக்கவசம் அணிவது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை சொல்லும் வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு, ஜூரஹரேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.
விலை உயரும்
குருப்பெயர்ச்சியின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உண்டு. உணவுப் பொருள், காய்கறிகள், வெள்ளை நிறப் பொருட்களின் விலைகளும் உயரலாம். தங்கம், வெள்ளியின் விலை எப்பொழுதும் போல ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். இரும்பு, மருந்து, மரம், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாபம் குவிப்பர். எழுத்துத் துறை, பத்திரிக்கைத் துறை, கலைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயரக்கூடிய வாய்ப்பே உண்டு.
குருவின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வைக் காலங்களில் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளம், நெருப்புப் பாதிப்பு போன்றவைகளில் இருந்து நாம் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. அல்லது அவரவர் எல்லை தெய்வங்களை முறையாக வழிபடுவதும் பலனளிக்கும்.
மேஷ குருவின் சஞ்சாரம்
(22.4.2023 முதல் 1.5.2024 வரை)
22.4.2023 முதல் 22.6.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)
23.6.2023 முதல் 11.9.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் (சுக்ர சாரம்)
12.9.2023 முதல் 21.11.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் வக்ர இயக்கத்தில் குரு பகவான் ( சுக்ர சாரம்)
22.11.2023 முதல் 20.12.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் (கேது சாரம்)
21.12.2023 முதல் 5.2.2024 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)
6.2.2023 முதல் 16.4.2024 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பவான் (சுக்ர சாரம்)
17.4.2024 முதல் 1.5.2024 வரை கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் (சூரிய சாரம்)
12.9.2023 முதல் 20.12.2023 வரை குரு பகவான் வக்ரம் பெறுகின்றார். (அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்கால்களில்)
1.5.2024-ல் ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan