search icon
என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது.
    • ஷபீக், ஷான் மசூத், ஆகா சல்மான் ஆகியோர் சதமடித்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 492 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 172 ரன்னும், ஹாரி புரூக் 141 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், இங்கிலாந்தின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35 வது சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.

    இதையடுத்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா, பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான், இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தப் பட்டியலில் சச்சின் (51), முதலிடத்திலும், காலிஸ் (45) 2வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் (41) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    • பயங்கரவாதிகளிடம் இருந்து 6 கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
    • துப்பாக்கி சூட்டின் போது 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம், 8 பேர் தப்பியோடினர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தின் மேகர்வால் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகர்வால் பகுதியில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டைக்கு வழிவகுத்தது.

    இந்த துப்பாக்கி சூட்டின் போது, 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம், 8 பேர் தப்பியோடினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து 6 கையெறி குண்டுகள், 7 கலாஷ்னிகோவ்கள், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
    • சீன நாட்டினரை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

    லாகூர்:

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் தனியார் மின் உற்பத்தி, விநியோக நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த பொறியாளர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இதனிடையே, பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வபோது பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், கராச்சியில் உள்ள மின் உற்பத்தி, விநியோக நிறுவனத்தில் பயணியாற்றி வரும் சீன நாட்டினரை குறிவைத்து இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. சீன நாடு ஊழியர்கள் பயணித்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்தனர். கராச்சி விமான நிலையம் அருகே இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை பலூசிஸ்தானை சேர்ந்த கிளர்ச்சிக்குழு மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
    • இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர்.

    பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வாலிபரை திருமணம் செய்து வைக்கவும் மறுத்தனர்.

    இது இளம்பெண்ணுக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தையே தீர்த்துக்கட்டும் சதிகாரியாக மாறினார். இதற்கான திட்டத்தை தனது காதலன் யோசனைபடி அரங்கேற்றினார்.

    அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்தார். இதுதெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உள்பட குடும்ப உறவுகள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்த கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    • கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையம்கீழ் கொண்டு வரப்பட்டன.
    • தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

    விமான நிலையத்திற்கு வெளியே டேங்கர் ஒன்று வெடித்ததாக போலீசாரும், மாகாண அரசாங்கமும் தெரிவித்தன. இதில் 4 பேர் காயம் அடைந்தனர், பல வாகனங்கள் சேதமடைந்தன.

    ஆனால் சிந்து மாகாண உள்துறை மந்திரி ஜியா உல் ஹசன் உள்ளூர் தொலைக்காட்சியான ஜியோவிடம் கூறுகையில், இது வெளிநாட்டினர் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.

    இதுதொடர்பான வீடியோவில் கார்கள் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்து அடர்த்தியான புகை எழுவதும் பதிவானது.

    கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இம்ரான்கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் திரண்டு பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர்.

    மோதல் காரணமாக இஸ்லாமாபாத்தில் இணைய தள சேவை முடக்கப்பட்டது. இதற்கிடையே இம்ரான்கான தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மக்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

    கராச்சி:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

    இந்தத் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.

    இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன.

    இதற்கிடையே, பாகிஸ்தான் சென்றடைந்த இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை.

    காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை என கூறப்படுகிறது.

    அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் செயல்படவுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட ஜாக் கிராலி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • பாகிஸ்தானில் இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜாகிர் நாய்க் ஆச்சார்யரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்ல வந்தார்.

    தொலைக்காட்சி நேரலைகளில் எதிரெதிர் கருத்து கொண்டவர்கள் காரசாரமாக விவாதிப்பதை பார்த்திருப்போம். சில நேரங்களில் அவை வார்த்தைப் போராக வெடித்து கைகலப்பாக மாறும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது. அப்படி ஒரு விவாத நிகழ்ச்சி அடிதடியில் முடிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆச்சார்யா விக்ரமாதித்யா என்ற அந்த உள்ளூர் பிரபலம், நாங்கள்[இந்து மாதத்தில்] அனைவரையும் மனிதர்களாக மாற்ற சொல்லித் தருகிறோம், மிருகங்களாக மாற்ற அல்ல.

    ஒரு மனிதன் மற்றொருவரிடம் எப்போதும் தவறாக நடக்கவே கூடாது என்று பேசிக்கொண்டிருந்தார் . அப்போது எதிர் விவாதம் செய்யும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாய்க் உடனே அவரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்லி முடிக்கும் முன்னர் அவர் மீது பாய்ந்த ஆச்சார்யா விக்ரமாதித்யா கன்னத்தில் அரைந்து சரமாரியாகத் தாக்கினார்.

    பின் இருவரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சமாதானம் செய்தார். புராணக் கதை ஒன்றின்படி கிருஷ்ணருக்கு 16,000 மனைவிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜாகிர் பேசியதே ஆச்சார்யர் பொறுமையிழக்க காரணம் ஆகும். 

    • டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
    • டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து.

    இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

    ஆனால் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

    பணிச்சுமை அதிகமாக உள்ளதால் கேப்டன்சியில் இருந்து விலகி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.

    • ஒரு தொழிலாளி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
    • கடத்தப்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    லாகூர்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அம்மாகாணத்தில் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், வெளிமாகாணங்களை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன

    இந்நிலையில், அம்மாகாணத்தின் பஞ்ச்கூர் நகர் குபா இ அபடன் பகுதியில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இங்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 8 கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் அனைவரும் கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒரு தொழிலாளி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்

    அதேவேளை, பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 20 தொழிலாளர்கயும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    • பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த முகமது யூசுப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
    • ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் திடீரென விலகியுள்ளார்.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தைச் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.

    இவர் ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

    இந்தநிலையில் அங்குள்ள வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களது முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ×