என் மலர்
நீங்கள் தேடியது "Prime Minister of Pakistan"
- நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை
- ஏற்கனவே "தோஷகானா 1" வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தோஷகானா பார்ட் 2 வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றுமொரு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி பெற்ற பரிசுகளில் ஊழல் செய்ததாக வழக்கு.
இந்த வழக்கு 'தோஷகானா 2' என்று அழைக்கப்படுகிறது. அரசு கருவூல பரிசுகள் தோஷகானா என்று அளிக்கப்படுவதால் இந்த பெயர்
2021-ம் ஆண்டு சவுதி அரேபியாவிடமிருந்து இம்ரான் கான் தம்பதி பரிசாக பெற்ற விலைமதிப்பற்ற நகைகள், வைரங்கள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட அரசு பரிசுகளை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தததே இவர்கள் மீதான குற்றச்சாட்டு.
சுமார் 10.9 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர்கள் கையாடல் செய்ததாக புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேபோல் மற்ற சில பரிசுகளை கையாடல் செய்ததாக "தோஷகானா 1" வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்த தோஷகானா பார்ட் 2 வழக்கில் 17 ஆண்டு தண்டனை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று இம்ரான் கான் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது.
இதற்கிடையே இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி ஏற்கனவே இந்த 'தோஷகானா 2' வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது அவருக்கு 17 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் பிடிஐ கட்சி இத்தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சட்டத்தை கேலி செய்யும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பும் போட்டியிட்டனர்.

இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பாகிஸ்தான் காபந்து பிரதமர் நசிர் உல் முல்க், பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #ImranKhan #PakistanNewPM
பாகிஸ்தானில் கடந்த 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் (வயது 65) பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க 137 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பதால், சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை அந்த கட்சி பெற்று உள்ளது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவர் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) பதவியேற்க விரும்புவதாக கூறியிருந்தார். எனவே அன்று பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
ஆனால் பாகிஸ்தானின் சுதந்திர தினம் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதால், அன்றைய நாளில் புதிய அரசு பதவியேற்க வேண்டும் என பல தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் தற்காலிக அரசின் பிரதமர் நசிருல் மல்க் இந்த விருப்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து தற்காலிக அரசின் சட்ட மந்திரியான அலி சபர் நேற்று முன்தினம் ‘டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஆகஸ்டு 14-ந் தேதி பதவியேற்க வேண்டும் என்றே நானும் (அலி சபர்), தற்காலிக அரசின் பிரதமரான ஓய்வுபெற்ற நீதிபதி நசிருல் மல்க்கும் விரும்புகிறோம். அதன்மூலம் தேசிய அளவிலான உற்சாகத்துடன் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரை 11 அல்லது 12-ந் தேதியில் தொடங்கலாம். அப்படி 11-ந் தேதி தொடங்கினால் அன்றே புதிய உறுப்பினர்கள் பதவியேற்க முடியும்.
பின்னர் 13-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்தி, 14-ந் தேதி பிரதமர் தேர்வை நடத்தலாம். தொடர்ந்து, அன்றே புதிய பிரதமருக்கு அதிபர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியும். அதேநேரம் நாடாளுமன்ற தொடர் 12-ந் தேதி தொடங்கினால், 15-ந் தேதிதான் பிரதமரை தேர்வு செய்ய முடியும்.
ஆனால் பாகிஸ்தானின் புதிய பிரதமர், நாட்டின் சுதந்திர தினமான 14-ந் தேதி பதவியேற்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அலி சபர் கூறினார்.
பாகிஸ்தானின் சுதந்திர தினவிழாவில் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும் என தற்காலிக அரசு விரும்புவதால், இம்ரான்கானின் பதவியேற்பு விழா 14-ந் தேதிக்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவியேற்றபின் தற்காலிக அரசிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொள்வார். #ImranKhan






