search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khyber-Pakhtunkhwa"

    • சில வருடங்களாக, பாகிஸ்தானில் பல இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன
    • தற்போது வரை குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது, கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa) பிராந்தியம்.

    இதன் தலைநகரம், பெஷாவர் (Peshawar).

    கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் பல இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இன்று காலை, இந்நகரில் போர்ட் பஜார் (Board Bazaar) பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

    இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    காயமடைந்தவர் அங்குள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் (Lady Reading Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    வெடித்த குண்டுகள், 4லிருந்து 5 கிலோகிராம் வரை எடை கொண்டவை என்றும் நடைபெற்றது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

    தற்போது வரை குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.

    அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையின் முக்கிய பிரிவு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம்" என தெரிவித்தார்.

    பெஷாவர் நகரை மையமாக வைத்து "பாகிஸ்தானி தலிபான் குழு" (TTP) என அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வந்தனர் என்பதும் சுமார் 1 மாதத்திற்கு முன்பாக பலூசிஸ்தான் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் சுமார் 30 பேர்  உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது
    • கேபி (KP) பிராந்திய பயங்கரவாதமும் தீர்மானத்தில் காரணமாக கூறப்பட்டுள்ளது

    2024 பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தான் பாராளுமன்ற 16-வது தேசிய அசெம்பிளிக்கான 342 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் உறுப்பினர்கள், தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தனர்.

    நேற்று, தேர்தலை தள்ளி வைக்குமாறு 3-வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ஹிலாலுர் ரெஹ்மான் எனும் சுயேச்சை உறுப்பினர் கொண்டு வந்த இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதாவது:

    கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் மக்களால் தங்கள் ஜனநாயக கடமையை இயற்ற முடியாமல் போகலாம். மேலும், கைபர்-பக்துங்க்வா (Khyber-Pakhtunkhwa) பிராந்தியத்தில் நடைபெறும் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள், அப்பகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) பிப்ரவரி 8 தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சம்பந்தபட்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு காலகட்டத்தில் தேர்தலை நடத்துவது நல்லது.

    இவ்வாறு அந்த தீர்மானம் கூறுகிறது.

    2018ல் தேர்வான பாராளுமன்றத்தின் பதவிக்காலம், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.

    அதை தொடர்ந்து, கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி போடப்பட்டது.

    அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டது.

    இறுதியாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பிப்ரவரி 8 அன்று தேர்தல் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.

    தற்போது 3-வது முறையாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் என்ன இறுதி முடிவை எடுக்க போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

    ×