என் மலர்
உலகம்

வடமேற்கு பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- இரண்டு மாவட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
- ஒரு இடத்தில் 3 பேரும், ஒரு இடத்தில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது கைபர் பக்துன்க்வா மாகாணம். இந்த மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்போதும் பதற்றமான நிலையிலேயே இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பயங்கரவாதிகள் இங்குதான் பதுங்கியிருக்கின்றனர். மலைகள் அடர்ந்த இந்த மாகாணம் மறைந்து இருப்பதற்கு ஏற்றாற்போல் உள்ளதால், பயங்கரவாதிகள் தங்களது இருப்பிடத்தை இங்கே மாற்றி வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. அடிக்கடி குண்டு வெடிப்புகளும் நடைபெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்தான் நேற்று கோஹத் மற்றும் கராக் மாவட்டங்களில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.
பாசித் கெல் அருகே போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் இதில் 3 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கராக் மாவட்டத்தின் மிர் கலாம் பண்டா என்ற பகுதியில் ரகசிய தகவின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகள் உள்ள பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியும் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






